ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன்...!

ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன்...!
  • Share this:
சென்னை, வளசரவாக்கத்தில் ஊரடங்கை பயன்படுத்தி சிறுவன் ஒருவர் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளார்.

சென்னை, வளசரவாக்கம், வேலன் நகர் 8-வது தெருவில் உள்ள வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றதாக வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டது.

அங்கு சென்ற போலீசார் கொள்ளை முயற்சி நடைபெற்ற வீட்டில் இருந்த சிசிடிவி பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, ஊரடங்கை ஒட்டி அமைதியாக இருக்கும் அந்த தெருவுக்குள் 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவர் நுழைகிறார்.


பின்னர் ஒவ்வொரு வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டை திறந்து வெளியில் ஏதாவது திருடுவதற்கு பொருள் கிடைக்கிறதா என்று பார்க்கிறார். ஒரு வீட்டின் பின்னால் சென்ற போது ஜன்னல் வழியாக வீட்டின் உரிமையாளர் அந்த சிறுவனை பார்த்து சத்தம் போடுகிறார்.

இதை அடுத்து அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இதை அடுத்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிறுவனை தேடி வருகின்றனர்.

Also see...
First published: March 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading