• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் கடந்த 10 நாட்களில் 18 கிலோ தங்கம் கடத்தல்...! 5 பெண்கள் உட்பட 32 பேர் கைது!

சென்னையில் கடந்த 10 நாட்களில் 18 கிலோ தங்கம் கடத்தல்...! 5 பெண்கள் உட்பட 32 பேர் கைது!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

  • News18
  • Last Updated :
  • Share this:
சென்னையில் கடந்த 10 நாட்களில் 18 கிலோ தங்கம் கடத்தப்பட்டதில் 5 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விமானம் மூலம் தங்கம் கடத்தி வரும் சம்பவம் தினசரி நடந்த வருகிறது.
கடந்த 1ம் தேதி மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வந்த 1.87 கோடி மதிப்பிலான 4.46கிலோ தங்கநகைகளை பறிமுதல் செய்த சுங்கதுறையினர் 4 பேரை கைது செய்தனர்.

2-ம் தேதி பாங்காங்க் மற்றும் கொழும்பில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 4.8 கிலோ தங்க்கட்டிகள் பயணிகளை சோதனை செய்யும் போது சிக்கியது. 2.05 கோடி மதிப்பிலான தங்ககட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பெண் உட்பட 6 பேரை கைது செய்தனர்.

3-ம் தேதி சிங்கப்பூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 45 லட்சம் மதிப்பிலான 1.06 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா நாட்டு பெண் பயணி உட்பட 3 பேர் கைது செய்யபட்டனர்.



4-ம் தேதி மலேசியாவில் இருந்த பயணி லேப்டாப்பில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட தங்க நகை, துபாய் மற்றும் கொழும்பு விமானத்தில் கடத்திவரப்பட்ட 50 லட்சம் மதிப்பிலான 1.2 கிலோ தங்கநகைகளை பறிமுதல் செய்த சுங்கதுறை  அதிகாரிகள், 2 பெண் பயணி உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

5-ம் தேதி துபாய் விமானத்தில் வந்த பிரான்சு நாட்டை சேர்ந்த வரை சோதனை நடத்தியதில் அவர் கடத்தி வந்த 1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பயணியும் தங்க கடத்தில் அன்று கைது செய்யபட்டார்.

6-ம் தேதி துபாய் மற்றும் கொழும்பில்  இருந்து சென்னை வந்த  பயணிகள்   மறைத்து வைத்து கொண்டவந்த 68லட்சம் மதிப்பிலான  1.6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.



8-ம் தேதி மலேசியாவில் இருந்து விமானம் மூலம்   காலணியில் மறைத்து வைத்து கொண்டு வந்து தங்க கட்டிகளை பறிமதல் செய்த அதிகாரிகள்,  மேலும் இரண்டு 3 பயணிகளிடம் 60 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்து நான்கு பேரையும் கைது செய்தனர்.

9-ம் தேதி துபாயில் இருந்து வந்த பயணி கடத்தி வந்த  500 கிராம் தங்கத்தை பறிமுதல் அவரை கைது செய்தனர்.

10-ம் தேதி கொழும்பு மற்றும் துபாயில் இருந்த வந்த 4 பயணிகள் மீது சோதனை செய்த போது அவர்களிடம் இருந்து 66.5 லட்சம் மதிப்பிலான 1.58 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 10 நாளில் சென்னை விமான நிலையத்தில் 6 .50  கோடி மதிப்பிலான 18 கிலோ தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டு, 5 பெண்கள் உட்பட 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: