தப்பித்தவறி தேர்தலில் திமுக வெற்றி பெற்றால், நாங்கள் இங்கேயேதான் இருப்போம், அதிமுகவினர் எங்கே செல்வார்கள், சில வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறோம், வெற்றி பெற்ற உடன் சசிகலா தேர்தலில் போட்டியிடுவார் என தஞ்சையில் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அமமுக செயலாளர் மா.சேகரின் இல்ல திருமண விழா தஞ்சை அடுத்த ஒரத்தநாட்டில் அவரது இல்லம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவை மீட்டெடுப்பது எங்களுடைய ஒரே நோக்கம் என்றும், சிவி.சண்முகம் கூறிய கருத்து குறித்து கேட்டதற்கு, ரோட்டில் குறைப்பது, இஞ்சி திண்பது இதற்கெல்லாம் பதில் கூற முடியாது.
அண்ணா கூறியதை, நானும் கூறுகிறேன் என்று தெரிவித்த அவர். தப்பித்தவறி திமுக தேர்தலில் வெற்றி பெற்றால், நாங்கள் இங்கே தான் இருப்போம், ஆனால் அதிமுகவினர் எங்கே இருப்பார்கள் என அவர்களுக்கே தெரியும் என்றும், சசிகலா தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டதற்கு, சட்ட ரீதியாக சில வழக்குகளை சந்தித்து வருவதாகவும், அதில் வெற்றி பெற்ற உடன் நிச்சயம் போட்டியிடுவார், சசிகலா போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் என அவர் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 வருடங்கள் சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி இருக்கும் சசிகலா தற்போது தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார். அவரது வருகை அரசியல் ரிதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்த நிலையில் கட்சியினரை அவர் விரைவில் சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Sasikala, TTV Dhinakaran