சென்னை ஆவடியில் இருந்து கீழ் திருப்பதிக்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஆவினில் 50 டன் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ராஜஸ்தானிலிருந்து புது வகையான பால் இனிப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாகக் கூறிய அவர், ஆவினில் இருந்து இனிப்பு வகைகளை யாருக்கும் அன்பளிப்பாகக் கொடுக்கக் கூடாது என்று கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதேநேரம், நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார். அதேபோல், நாட்டு மாட்டுப்பால் மட்டுமின்றி, ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.