குழந்தையை மாடியில் இருந்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்த சித்தி

ராகவிக்காக தனது வயிற்றில் இருந்த கருவை பார்த்திபன் கலைக்க சொன்னதாகவும், பார்த்திபனுடன் சண்டை போட்டு குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், இதனால் ராகவி மீது தனக்கு வெறுப்பு ஏற்பட்டதாகவும் சூர்யகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

குழந்தையை மாடியில் இருந்து கீழே தள்ளி கொடூரமாக கொலை செய்த சித்தி
ராகவிக்காக தனது வயிற்றில் இருந்த கருவை பார்த்திபன் கலைக்க சொன்னதாகவும், பார்த்திபனுடன் சண்டை போட்டு குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், இதனால் ராகவி மீது தனக்கு வெறுப்பு ஏற்பட்டதாகவும் சூர்யகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.
  • News18
  • Last Updated: October 9, 2019, 4:43 PM IST
  • Share this:
சென்னை தாம்பரம் அருகே மாடியில் இருந்து கீழே விழுந்து சிறுமி உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் சித்தியே கொலையாளி என்பது தெரியவந்துள்ளது.

செம்பாக்கத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரின் 6 வயது மகள் ராகவி, 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துவிட்டதாக சேலையூர் போலீசுக்கு முதலில் தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொள்ள, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த பார்த்திபனின் இரண்டாவது மனைவி சூர்யகலா மீது சந்தேகம் எழுந்துள்ளது.


போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, பார்த்திபனின் முதல் மனைவியின் குழந்தையான ராகவியை, சூர்யகலா கொலை செய்தது தெரிந்தது.

தொந்தரவு தந்த ராகவியை அடித்து சுவரில் தள்ளியதில் சிறுமி உயிரிழந்ததாகவும், அதன்பின்னர் 3-வது மாடியில் இருந்து சடலத்தை கீழே தூக்கி வீசிவிட்டதாகவும் விசாரணையில் சூர்யகலா தெரிவித்துள்ளார்.

அதன்பின் ராகவியை காணவில்லை என கணவருக்கு தெரிவித்து, அவருடனே தேடி, கடைசியில் சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக நாடகமாடி அனைவரையும் சூர்யகலா நம்ப வைத்துள்ளார்.ராகவிக்காக தனது வயிற்றில் இருந்த கருவை பார்த்திபன் கலைக்க சொன்னதாகவும், பார்த்திபனுடன் சண்டை போட்டு குழந்தை பெற்றுக்கொண்டதாகவும், இதனால் ராகவி மீது தனக்கு வெறுப்பு ஏற்பட்டதாகவும் சூர்யகலா வாக்குமூலம் அளித்துள்ளார்.

Also see...

First published: October 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்