• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பைக்கில் லிப்ட் கொடுக்க மறுத்தவர் கொலை! அரக்கோணத்தில் பயங்கரம்

பைக்கில் லிப்ட் கொடுக்க மறுத்தவர் கொலை! அரக்கோணத்தில் பயங்கரம்

கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி

கொலை செய்யப்பட்ட தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே இரு சக்கர வாகனத்தில் லிப்ட் கொடுக்க மறுத்தவரை, இருவர், கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, வெளியில் சென்று விட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

வரும் வழியில் குடிபோதையில் நின்றுகொண்டிருந்த வினோத் மற்றும் பார்த்திபன் ஆகியோர், தங்களை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று மின்னல் கிராமத்தில் இறக்கிவிடும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு மறுப்பு தெரிவித்த தட்சணாமூர்த்தியை, கத்தியால் குத்தியதுடன், தலை மீது கல்லை போட்டு தாக்குதல் நடத்திவிட்டு தலைமறைவாகி விட்டனர். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், தட்சிணாமூர்த்தி உயிரிழந்தார்.

இதை அறிந்த தட்சிணாமூர்த்தியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அன்வர்த்திகான்பேட்டை பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் வேலூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கலைந்து சென்றனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: