உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!

உளுந்தூர்பேட்டை அருகே அரசுப் பேருந்து மீது ஆம்னி பேருந்து மோதியதில் 4 பேர் உயிரிழப்பு!
விப்பத்திற்குள்ளான பேருந்து
  • News18
  • Last Updated: January 20, 2020, 11:15 AM IST
  • Share this:
உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதி 4 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி என்ற இடத்தில் இன்று அதிகாலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் மீது பின்னால் வந்த அரசு பேருந்து மோதியதாக கூறப்படுகிறது.

இதனால் சாலையோரம் காரை நிறுத்தி விட்டு அரசு பேருந்து ஓட்டுநரிடம் காரில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அதிவேகமாக வந்த தனியார் ஆம்னி பேருந்து சாலையோரம் நின்றிருந்த அரசு பேருந்தின் பின்னால் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.


இதில் அரசு பேருந்தின் முன்புறமாக நின்று கொண்டு தகராறில்.ஈடுபட்டிருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அரசு பேருந்து மற்றும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்ததும் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also see...
First published: January 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading