நூற்றாண்டை நெருங்கும் அரசுப்பள்ளி - பிளஸ் 2 தேர்வில் முதன் முறையாக 100% தேர்ச்சி பெற்று சாதனை

செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டை நெருங்கும் நிலையில், முதன் முறையாக பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நூற்றாண்டை நெருங்கும் அரசுப்பள்ளி - பிளஸ் 2 தேர்வில் முதன் முறையாக 100% தேர்ச்சி பெற்று சாதனை
பள்ளி
  • News18
  • Last Updated: July 17, 2020, 3:53 PM IST
  • Share this:
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு நேற்று வெளியிடப்பட்டது. இதில் செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

1923-ம் ஆண்டு நடுநிலைப்பள்ளியாக தொடங்கப்பட்ட இந்த பள்ளி, பின்னர் மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், பள்ளி நூற்றாண்டை நெருங்கும் நிலையில் முதன் முறையாக பிளஸ் 2 தேர்தல் 100 சதவிகித தேர்ச்சியை பெற்று சாதித்துள்ளது.

ஆரவல்லி நகர் பகுதியில் வசித்து வரும் விவசாயியான சங்கர் - அஞ்சலையம்மாள் தம்பதியின் மகள் முனியம்மாள் 436 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.


முதலிடம் பிடித்த மாணவி முனியம்மாளை  பாராட்டும் ஆசிரியர்கள்


இப்பகுதியில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களின் ஒரே கல்வி வழிகாட்டியாக உள்ள இந்த பள்ளி, மேலும் மேம்படுத்தப்பட்ட வேண்டும் என்பது இங்குள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எனினும், வருத்தம் தரும் விதமாக இங்கு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வதாக கூறப்படுகிறது. இதனால், அரசு மற்றும் இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் தனி கவனம் செலுத்தி பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading