தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து!

விபத்து நிகழ்ந்து பத்து மணிநேரத்துக்கு மேல் ஆகியும், தீயின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது. எண்ணெய் ஆலை என்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தனியார் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து!
தீப்பிடித்து எரியும் ஆலை
  • News18
  • Last Updated: March 19, 2019, 11:13 AM IST
  • Share this:
தேனியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

தேனி அருகே ரத்தினம் நகரில் கருணாகரன் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் ஆலை இயங்கி வருகிறது. நேற்றிரவு சுமார் பத்து மணியளவில் ஆலையின் கொதிகலன் ஒன்றில் தீப்பொறி ஏற்பட்டதில் ஆலை முழுவதும் தீ பரவியது.

வேகமாக தீ பரவியதை அடுத்து, பணியில் இருந்து 46 ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். பாண்டியன் மற்றும் பால்பாண்டியன் ஆகிய இருவருக்கு மட்டும் தீக்காயம் ஏற்பட்டது.


இதனையடுத்து தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, மதுரை, வத்தலகுண்டு ஆகிய பகுதிகளில் இருந்து பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

விபத்து நிகழ்ந்து பத்து மணிநேரத்துக்கு மேல் ஆகியும், தீயின் தாக்கம் குறையாமல் தொடர்ந்து எரிந்து வருகிறது. எண்ணெய் ஆலை என்பதால், தீயை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தினால் ஆலையில் இருந்த 15 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாகின. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்திய ஆட்சியர் பல்லவி பல்தேவ், விபத்துக்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.Also see...

First published: March 19, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்