• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தேனாம்பேட்டையில் ஒரே நாளில் 222 பேருக்கு வைரஸ் பாதிப்பு... சென்னை கொரோனா அப்டேட்!

தேனாம்பேட்டையில் ஒரே நாளில் 222 பேருக்கு வைரஸ் பாதிப்பு... சென்னை கொரோனா அப்டேட்!

கோப்புப்படம்

கோப்புப்படம்

ஓரே நாளில் தேனாம்பேட்டையில் 222 பேரும், அண்ணா நகரில் 209 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவொற்றியூரில் தொற்று பாதிப்பு 1000-ஐக் கடந்துள்ளது.

  • Share this:
ஓரே நாளில் தேனாம்பேட்டையில் 222 பேரும், அண்ணா நகரில் 209 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், திருவொற்றியூரில் தொற்று பாதிப்பு 1000-ஐக் கடந்துள்ளது.

தமிழகத்தில் ஜுன் 11ம் தேதி உறுதி செய்யப்பட்ட 1875 தொற்றுகளில், சென்னையில் 1407 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தொற்று பாதித்தவரின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது.

இதில், 13,808 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 279 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையின் பங்கு 70.7 சதவிகிதம் ஆகும்.

சென்னையில், ஒரே நாளில் நேரத்தில் அதிகபட்சமாக, தேனாம்பேட்டையில் 222 பேரும், அண்ணா நகரில் 209 பேருக்கும், அண்ணாநகரில் 209 பேருக்கும்,  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 179 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 179 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் 161 பேரும்,  வளசரவாக்கத்தில் 101 பேரும், திரு.வி.க.நகரில் 94 பேரும், அடையாறு 53 பேரும், திருவொற்றியூரில் 52 பேரும், அம்பத்தூரில் 48 பேரும், ஆலந்தூரில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், பெருங்குடியில் 31 பேரும்,  சோழிங்கநல்லூரில் 24 பேரும், மாதவரத்தில் 23 பேரும், மணலியில் 22 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, தேனாம்பேட்டையில் தொற்று பரவல் வேகம் தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே ஒவ்வொரு நாளும் 200-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் அண்ணா நகரிலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.

அதேபோல், கடந்த சில நாட்களாக தொற்று தீவிரம் குறைந்திருந்த வளசரவாக்கம் மற்றும் கோடம்பாக்கத்தில் மீண்டும் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மண்டல வாரியாக மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை:

ராயபுரம் 4584

தண்டையார்பேட்டை 3584

தேனாம்பேட்டை 3291

கோடம்பாக்கம் 2966

திரு.வி.க.நகர் 2550

அண்ணா நகர் 2571

அடையாறு 1534

வளசரவாக்கம் 1271

திருவொற்றியூர் 1024

அம்பத்தூர் 949

மாதவரம் 747

ஆலந்தூர் 555

பெருங்குடி 515

சோழிங்கநல்லூர் 493

மணலி 405

ராயபுரத்தில் தொற்று பாதிப்பு 4500-ஐக் கடந்துள்ளது. அதேபோல், திருவொற்றியூரில் தொற்று எண்ணிக்கை 1000-ஐக் கடந்துள்ளது.
சென்னையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளோரின் எண்ணிக்கை 13808  ஆக உள்ளது. கிசிக்சையில் இருப்போரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை சென்னையில் அதிகமாக உள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை ஆண்கள் 60.20 சதவிகிதத்தினரும், பெண்கள் 39.80 சதவிகிதத்தினரும், திருநங்கைகள் 0.01 சதவிகிதத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also read... தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? முதல்வர் பழனிசாமி பதில்






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: