வேலூரில் போலி பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்.. மத்திய மாநில அரசுகளுக்கு நஷ்டம்..

வேலூரில் போலி பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம்.. மத்திய மாநில அரசுகளுக்கு நஷ்டம்..

மாதிரி படம்

வேலூர் மாவட்டத்தில் போலி பெட்ரோல், டீசல் விற்பனை அமோகம் நடைபெற்று வருகிறது. இதனால் மாநில அரசுக்கு ரூ20-ம் மத்திய அரசுக்கு 33ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது. 

 • Share this:
  வேலூர் மாவட்டத்தில சில ஆண்டுகளுக்கு முன்பு பெட்ரோல் டீசல் போன்று இராசயன பொருட்களால் உருவாக்கப்பட்ட போலி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை அமோகமாக நடந்து வந்தது. இதனால் பல இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனகளின் என்ஜின்கள் அடிக்கடி பழுதாகி வாகன ஓட்டிகளை சிரமத்திற்க்குள்ளாக்கியது.

  கடந்த ஆண்டு  வேலூர் அணைகட்டு பகுதியில் போலி பெட்ரோல் உபயோகபடுத்திய ஒருவர் திடீர் என தீப்பிடித்து, சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதனால் விழிப்படைந்த மாவட்ட நிர்வாகம் போலி பெட்ரோலை ஒழித்து கட்டியது.

  இந்நிலையில், தற்போது மீண்டும் இந்த போலி பெட்ரோல் தலை தூக்கி உள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட பெட்ரோல் வணிகசங்க தலைவர் அருனோதயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல் பங்க்-ல் வந்து பெட்ரோல் போடமுடியாத வாகனங்களுக்கு அவை இருக்கும் இடத்திலே சென்று பெட்ரோல், டீசல் போட பிரவுசர் (BROWSER) என்ற உரிமம் பெற்ற வாகனத்தை அரசு அனுமதித்துள்ளது.

  வேலூர் மாவட்ட பெட்ரோல் வணிகசங்க தலைவர் அருணோதயம்


  ஆனால் இந்த சட்டத்தை பயன்படுத்தி பலர் உரிமம் பெறாமல் அபாயகரமான முறையில் மொபைல் பங்க் என்று ஆங்கங்கே பெட்ரோல் டீசலை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தில் உள்ள 275 பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பாதிக்கபடுகின்றனர். எனவே அரசு உரிமம் இல்லாத பிரவுசர் வாகனகங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பயோ பெட்ரோல் டீசல் என்ற பெயரில் பெட்ரோல் டீசல் அல்லாத வேறு ஒரு திரவத்தை ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களிலிருந்து கொண்டுவந்து வேலூரில் விற்பனை செய்கின்றனர்.

  இந்த திரவத்தை பயன்படுத்தும் பொழுது, வாகனங்களின் இன்ஜின்கள் விரைவில் பழுதடைந்து வினாக போகும் அபாயம் உள்ளது.மேலும் அரசு நிர்ணயித்த விலையைவிட, குறைவாக விற்பதால் மாநில அரசுக்கு லிட்டர் ஒன்றுக்கு 20 ரூபாயும் மத்திய அரசுக்கு 33 ரூபாயும் நஷ்டம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் சாலையின் ஓரத்தில்  வண்டியை நிருத்திவிட்டு வெளிப்படையாக மிகவும் அபாயகரமான முறையில் இந்த போலி பெட்ரோல், டீசலை விற்பனை செய்கின்றனர்.

  மேலும் படிக்க... இன்று விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட்

  இது குறித்து வீடியோ ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் செய்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. கொரோனா காலத்தில் ஏற்ககெனவே விற்பனை இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கும் நாங்கள் இந்த பயோடீசலால் மேலும் நஷ்டப்பட்டு கொண்டு உள்ளோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பி உள்ளோம். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட பெட்ரோல் வணிகசங்க தலைவர் அருணோதயம் கூறினார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: