Home /News /tamil-nadu /

தியாகிகள் மாத ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தியாகிகள் மாத ஓய்வூதியம் உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல என கூறி முதலமைச்சர் அறிவிப்புகளை வெளீயிட்டார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சுதந்திர  தினத்தை முன்னிட்டு முதல்வர் .ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2022) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து ஆற்றிய போது பல அறிவிப்புகளை வெளியிட்டார்

    இந்திய நாட்டின் தியாகிகளைப் போற்றிப் பாராட்டுவதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு யாருக்கும் சளைத்தது அல்ல என கூறி முதலமைச்சர் அறிவிப்புகளை வெளீயிட்டார்.

    அவர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

     
    மாநில அரசின் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத் தொகை, ஆகஸ்ட் - 15 ஆம் நாள் முதல், ரூபாய் 18 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். குடும்ப ஓய்வூதியம் ரூபாய் 9 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
    வீரபாண்டிய கட்டபொம்மனின் வழித்தோன்றல்கள், சிவகங்கை மருதுபாண்டியர் சகோதரர்களின் வழித்தோன்றல்கள், சிவகங்கை முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் வழித்தோன்றல்கள், வ.உ.சிதம்பரனார் வழித்தோன்றல்களுக்கான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் 9 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
    ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக, மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப் படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம், 16 இலட்சம் பேர் பயன்பெறுவர். அரசுக்கு ஆண்டுக்கு 1,947 கோடியே 60 லட்சம் ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: CM MK Stalin, Independence day

    அடுத்த செய்தி