முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு: தலைமை செயலாளர் இறையன்பு விடுத்த எச்சரிக்கை!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு: தலைமை செயலாளர் இறையன்பு விடுத்த எச்சரிக்கை!

காட்சிப் படம்

காட்சிப் படம்

ஐஏஎஸ் அதிகாரிகள் விடுமுறையில் செல்லும் போதும் அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக மாற்று தொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவும், அரசு அதிகாரிகள் முறையாக செயல்படவும் தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்களை வகுத்து அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

முன்னதாக கடந்த டிசம்பம் மாதம் கூட, ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். அதில், அரசு பரிந்துரை செய்துள்ள வடிவத்தில் அனைத்து அதிகாரிகளும் வருடாந்திர வருமானம் குறித்த தகவலை சமர்பிக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரிலோ அல்லது அவர்களின் குடும்பத்தினரின் பெயரோலோ இருக்கும் அசையா சொத்துகள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தையும் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்வது அவசியம்.ஒருவேளை தாக்கல் செய்யாவிடில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இதுபோல தொடர்ந்து, ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்து அவர்களை தன் கட்டுக்குள் வைத்து வருகிறார். அந்தவகையில், ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை இறையன்பு வெளியிட்டுள்ளார்.

அதாவது, விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், விடுமுறையில் செல்லும் போதும் அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக மாற்று தொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Iraianbu IAS