• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பெண்களுக்கு வாக்குரிமை, இருமொழி கொள்கை... தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் என்ன?

பெண்களுக்கு வாக்குரிமை, இருமொழி கொள்கை... தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டங்கள் என்ன?

தமிழ்நாடு சட்டமன்றம்

தமிழ்நாடு சட்டமன்றம்

பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்கிற வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை 1989ம் ஆண்டு அப்போதை முதலமைச்சராக இருந்த கருணாநிதி நிறைவேற்றினார்.

  • Share this:
நூற்றாண்டு காணும் தமிழக சட்டமன்றத்தில் இந்தியாவிற்கே வழிகாட்டிய பல சட்டங்கள், தீர்மானங்களை இயற்றப்பட்டுள்ளன.

1921ம் ஆண்டு நீதிகட்சி ஆட்சியின் போது பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டியில் நீதிக்கட்சி கொண்டுவந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான அரசாணை பின்னாளில் இடஒதுக்கீட்டிற்கான சட்டங்களை கொண்டு வர வழிவகுத்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

நாட்டிலேயே முதல்முறையாக பெண் ஒருவர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வந்தது தமிழக சட்டமன்றத்தில் தான். முத்துலட்சுமி அமையார் தான்அந்த சிறப்புக்கு உரியவர். 1925ம் ஆண்டு சட்டமன்றத்தில் முத்துலட்சுமி அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தேவதாசி ஒழிப்புச்சட்டம் தான், 1946ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தமிழகத்தில் இருந்து தேவதாசி முறையை முழுமையாக ஒழித்தது.



1967ம் ஜூலை 18ம் தேதி மதராஸ் ஸ்டேட் என்ற பெயரை தமிழ்நாடு என்று பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதே ஆண்டிலேயே சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இரு மொழிக் கொள்கை

தமிழகத்தில் இந்தி திணிப்பை ஒழிக்க ஏதுவாக, அண்ணா முதலமைச்சராக இருந்த போது இரு மொழிக் கொள்கை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் முதல்முறையாக பேருந்து போக்குவரத்து அரசுடமையாக்கப்பட்டது தமிழகத்தில் தான். இதற்கான சட்டம் 1971ம் ஆண்டு நவம்பர் மாதம் இயற்றப்பட்டது.

மேலும் படிக்க: சட்டப்பரேவையில் 16வது தலைவராக கருணாநிதியின் புகைப்படத்தை திறந்து வைத்தார் குடியரசுத்தலைவர்!


1971ம் ஆண்டு ஏ.என்.சட்டநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில் பொதுப்பட்டியலை 51 சதவிகிதம் என குறைத்து, பிற்படுத்தப்பட்டோருக்கு 31 சதவிகிதம் என்றும், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவிகிதம் என்று உயர்த்தி புதிய இட இதுக்கீடு ஆணை பிறப்பிக்கப்பட்டது.



சொத்தில் பெண்களுக்கு சம உரிமை
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்கிற வரலாற்று சிறப்பு மிக்க சட்டத்தை 1989ம் ஆண்டு அப்போதை முதலமைச்சராக இருந்த கருணாநிதி நிறைவேற்றினார்.

1994ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது இடத்துக்கீடு 69 சதவீதமாக உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. 2007ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேறியது.

இதையும் படிக்க: சட்டசபை வரலாற்றை திமுக மாற்றி அமைத்து விழா கொண்டாடுகிறது - ஜெயக்குமார் குற்றச்சாட்டு!


நுழைவு தேர்வால் ஏழை மாணவர்களின் பொறியியல் கனவு பாதிக்கப்படுவதாக கருதிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி 2007ம் ஆண்டு அனைத்து நுழைவு தேர்வுகளையும் ரத்து செய்து சட்டம் இயற்றினார். 2006ம் ஆண்டு 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி கட்டாயம் என சட்டம் இயற்றப்பட்டது.



அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை அளிக்கும் வகையில் 2010ம் ஆண்டு தமிழ்நாடு சமச்சீர் பள்ளிக்கல்வி முறைச்சட்டம் இயற்றப்பட்டது.
ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் போராட்டம் நடந்த நிலையில், 2017ம் ஆண்டு ஜல்லிக்கட்டு சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் சலசலப்புகள், ஆட்சிக்கலைப்புகள் என எத்தனையோ பிரச்சனைகளை கடந்து, நாட்டிற்கே முன் உதாரணமாக தமிழ்நாடு திகழ்வதற்கு அடிப்படையாக இருக்கும் தமிழக சட்டமன்றம் கடந்து வந்த நூற்றாண்டு பயணம் வியப்பிற்கு உரியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Murugesh M
First published: