• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின் நிறுவனத்தில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

சோதனைக்குப் பின்னர் கைப்பற்றப் பட்ட ஆவணங்களை தங்கள் கைவசம் எடுத்து சென்றனர்.

  • Share this:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவரின், கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி இஞ்சினியரிங் நிறுவனம் மற்றும் பாலத்துறையில் உள்ள வி.எஸ்.எல் சேன்ட் (vsl sand) நிறுவனம் ஆகிய இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

சென்னை மற்றும் கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அவருக்கு நெருக்கமானவர்கள் நடத்தும் நிறுவனங்களின் அலுவலகங்கள் என 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 10ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடைபெற்றது.

அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்த நிலையில், பீளமேடு பகுதியில் உள்ள கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்தில் மட்டும் இரண்டாவது நாளாக நேற்றும் சோதனை நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய சோதனை இரவு 10 மணி வரை நீடித்தது.

இதே போல பாலத்துறை அருகே கருஞ்சாமி கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கே.சி.பி இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சந்திராபிரகாஷ்க்கு சொந்தமான விஎஸ்எல் சேன்ட் (vsl sand) நிறுவனத்தில் நேற்று பிற்பகல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. இந்த இரு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையிலும் பல்வேறு முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சோதனைக்குப் பின்னர் அந்த ஆவணங்களை தங்கள் கைவசம் எடுத்து சென்றனர்.

Must Read : எஸ்.பி.வேலுமணிக்கு அடுத்து ஜெயகுமார் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் பரபரப்பு தகவல்

இதே போன்று திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் உள்ள கே.சி.பி நிறுவனத்தின் குவாரியிலும் நேற்று பிற்பகல் முதல் சோதனையானது நடத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இடங்களில் இருந்து கைப்பற்றபட்ட ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: