பள்ளிகள் திறப்பு குறித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று முக்கிய ஆலோசனை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பது மற்றும் அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்துவது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  நாடு முழுதும், தொடக்க பள்ளி முதல் அனைத்து வகை வகுப்புகளையும் திறந்து மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துமாறு, இந்திய மருத்துவ கவுன்சிலான (ஐ.சி.எம்.ஆர்) அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்தும், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துவது குறித்தும், பள்ளி கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

  இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் சில மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை, துணை இயக்குனர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

  பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, அதிகாரிகளின் ஆலோசனைகளை கேட்க இருக்கின்றனர்.

  Must Read : கொரோனா நெகட்டிவ் சான்றிதழுடன் வந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி: ராதாகிருஷ்ணன்

  இந்நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகளை திறந்து, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளி கல்வித்துறை தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: