தமிழக பட்ஜெட் 2019 - முக்கிய அம்சங்கள் என்ன?

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.

தமிழக பட்ஜெட் 2019 - முக்கிய அம்சங்கள் என்ன?
மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.
  • News18
  • Last Updated: February 8, 2019, 12:09 PM IST
  • Share this:
2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2019-20-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

2018-2019 ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் கணிக்கப்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை 19319 கோடி ரூபாயிலிருந்து 2019-2020 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை 14,315 கோடி ரூபாயாகக் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.


2 லட்சம் நான்கு சக்கர வாகனங்கள், 2 லட்சம் இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில் நிலத்தடி வாகன நிறுத்த வசதிகள், பன்னடுக்கு வாகன நிறுத்த வசதிகள் மற்றும் சாலையோர திறன்மிகு வாகன நிறுத்தம் ஆகியவற்றை செயல்படுத்த 'விரிவான ஒருங்கிணைக்கப்பட்ட வாகன நிறுத்த மேலாண்மைத் திட்டத்தை, அரசு-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் 2000 கோடி ரூபாய் செலவில் சென்னை நகரில் இந்த அரசு செயல்படுத்தும்.

2018 - 2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,10,178,43 கோடி ரூபாயாக உயர்த்தி கணிக்கப்பட்டுள்ளதுடன், 2019-2020 ஆம் ஆண்டிற்கான
வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 124,813.06 கோடி ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில்
மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 132691 கோடி ரூபாயாக
மதிப்பிடப்பட்டுள்ளது.

2019-20 ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளில் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்காக 300 கோடி ரூபாயும் நீடித்த நிலையான வேளாண்மைக்கான தேசிய இயக்கத்திற்காக 87.22 கோடி ரூபாய் உட்பட வேளாண்மைத் துறைக்கு 10,550.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள நதிகரைகளில் வசிக்கும் 38000 பயனாளிகளுக்கு 4647.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. வறுமை, கல்வியறிவின்மை, வேலையின்மை ஒழிப்பு பாலின சமத்துவம் போன்ற புதுமை முயற்சி திட்டத்துக்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறைக்காக 28,757.62 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்காக 12,563.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்காக விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம், விபத்துக்கு 4 லட்சம், விபத்து மூலம் ஏற்படும் ஊனத்திற்கு 1 லட்சம் என உயர்த்தப்பட்டு இத்திட்டத்திற்கு 250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டில் இராமேஸ்வரத்தில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களில் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்.

கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் உள்ள குப்பை கொட்டும் இடங்களை சுத்திகரிப்பு செய்து அந்த இடங்களை மீட்டெடுப்பதற்கும் கழிவில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் அலகினை அமைப்பதற்குமான திட்டத்தை அரசு - தனியார் பங்களிப்பு முறையில் செயல்படுத்தப்படும்.

ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் கடனுதவியுடன், 5000 கோடி ரூபாய் செலவில் 12,000 புதிய BS - VI தரத்திலான பேருந்துகளையும், 2000 மின்சார பேருந்துகளையும் வாங்கி பயன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூதல் கட்டத்தில் 500 மின்சார பேருந்துகளையும் சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களிலும் 2000 BS - VI பேருந்துகளை மாநிலம் முழுவதும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கும்., 5259.10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.

அண்ணா பல்கலைக்கழக உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும். ஹார்வார்டு பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை நிறுவப்பட்டுள்ளது

போல பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

2030-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் பாதுகாப்பான வாங்கும் திறனுக்கேற்ற வீட்டுவசதி அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்வதுடன் குடிசைப் பகுதிகளை மேம்படுத்தும் இலக்கினை அடைவதற்காக மாநில நகர்ப்புற வீட்டுவசதி மற்றும் குடியிருப்பு கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

பட்ஜெட் செய்திகள் நேரலையாக உடனுக்குடன்...
First published: February 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading