Tamil Nadu lockdown : தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது?

ஊரடங்கு கட்டுப்பாடு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Share this:
<தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ள நிலையில், தளர்வுகள் தொடர்பாக இன்று முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறையாததை அடுத்து, தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு வரும் 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களுக்கு தேவையான மளிகை, காய்கறிகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை தளர்த்துவது குறித்து மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆலோசனை நடத்திவருகிறார். அப்போது, தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக கொண்டு வரலாம் என நிபுணர்கள் பரிந்துரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்துள்ள மாவட்டங்களில், கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் அதிகமாகியுள்ளது. சில இடங்களில் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டாலும், பெரும்பாலான இடங்களில் சோதனை செய்யாததே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை புறநகரான பூந்தமல்லியில் ஊரடங்கை மீறி, பின்வாசல் வழியாக இறைச்சி விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். சுமார் 50 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து, 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தனர்.

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஊரடங்கு விதிகளை பெரும்பாலானோர் கடைபிடிப்பதில்லை என புகார் எழுந்துள்ளது. ஒசூரில் சில ஆலைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், நகரில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில் கோட்டார் பஜாரில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக மொத்த விற்பனை கடைகளை திறந்த வியாபாரிகளுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அங்கு போலீஸ் குவிக்கப்பட்டதோடு, அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர்.

திருப்பூர் கோவில் வழி அருகே இந்திரா காலனியில் கோயில் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். திருப்பூர் கே.செட்டிபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஜெயபிரகாசுக்கு சொந்தமான வைகை டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் பால் மற்றும் மளிகைப் பொருட்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. அங்கு சென்ற அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர்.

Must Read : இந்தியாவில் கொரோனா தினசரி உயிரிழப்பு மூன்றாயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் புதிதாக 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 32,221 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 460 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: