Home /News /tamil-nadu /

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு... இனி இதை மறந்துவிடாதீர்

டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு... இனி இதை மறந்துவிடாதீர்

மதுக்கடை

மதுக்கடை

TASMAC ஊழியர்களுக்கு ‘டாஸ்மாக்’ மேலாண்மை இயக்குனர் முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார், இதனை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    தமிழகத்தில் 6,434 டாஸ்மாக் (TASMAC) மதுபானக் கடைகள் உள்ளன. தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் தனியார் மது ஆலைகளிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானம், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுகிறது. இதன் மூலம், ஆண்டுக்கு சுமார் 37,000 கோடி ரூபாய் வருமானம் தமிழக அரசுக்குக் கிடைத்து வருகிறது.

    இந்நிலையில், டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் இல.சுப்பிரமணியன் டாஸ்மாக் அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்கள், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அதில், ‘டாஸ்மாக்’ மதுபான சில்லரை விற்பனை கடைகள், உயர் ரக எலைட் (Elite) மதுபான சில்லரை விற்பனை கடைகளில் ‘பில்’ புத்தகம், தினசரி சிட்டா, சரக்கு இருப்பு மற்றும் விற்பனை, வருகை, ஆய்வு உள்பட 21 பதிவேடுகளை முறையாக தினந்தோறும் பராமரிக்க வேண்டும்.

    ஆய்வின்போது இந்த ஆவணங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சமீபத்தில் ‘எலைட்’ மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது சில குறைபாடுகள் கண்டறியப்பட்டது. எனவே கிடங்குகளில் இருந்து ‘எலைட்’ கடைகளுக்கு ‘புல்’ (750 மி.லி.) அல்லது ஒரு லிட்டர் (1,000 மி.லி.) அளவிலான உயர்ரக மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு அனுப்பப்பட வேண்டும்.

    விற்பனையாகும் மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளுக்கு கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு ரசீது வழங்க வேண்டும். அதில் மதுபானத்தின் பெயர், அளவு, அரசு நிர்ணயித்த விலை மற்றும் கடை ஊழியர்களின் கையொப்பம் இருக்க வேண்டும். மதுபானங்கள் விலை பட்டியல் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு தெரியும்படி இருப்பு பட்டியலுடன் கட்டாயம் வைக்கப்பட வேண்டும்.

    Read More : சிறையில் சொகுசு வசதி பெற லஞ்சம் கொடுத்த வழக்கு - பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் சசிகலா?

    உற்பத்தியாளர்களிடம் இருந்து மதுபான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நாளில் இருந்து 90 நாட்களுக்குள் விற்பனை செய்திட வேண்டும். 90 நாட்களுக்கு மேற்பட்ட மதுபானங்கள் இருப்பில் இருக்கக் கூடாது. மதுபானங்கள் விற்பனையை அதிகளவில் ‘பி.ஓ.எஸ்’ (POS) எந்திரம் மூலம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Must Read : படிப்பை தொடர முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சான்றிதழ்கள் உக்ரைனில் சிக்கிவிட்டன - தமிழகம் திரும்பிய மாணவர்கள் கோரிக்கை

    இந்த அறிவுரைகளை மீறும் கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாவட்ட மேலாளர் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Tasmac

    அடுத்த செய்தி