மின்வாரிய ஊழியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமல்

கோப்பு படம்

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்

 • Share this:
  அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், மின்வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

  அரசு ஊழியர்களின் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்திற்காக யுனைடெட் இந்தியா இன்சூரன்சுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.  தற்போது இந்த திட்டம் மின்வாரிய ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

  Also Read : சென்னையில் 13 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த மழை!

  புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் மின்வாரிய அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் இதற்காக ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து மாதந்தோறும் 300 ரூபாய் பிடித்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Also Read : குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 திட்டம்... வதந்திகளை நம்பி ஏமாறும் ரேஷன் அட்டைத்தாரர்கள்

  அரிய வகை சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவோர் ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டு தொகை மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.  இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் கடந்த ஜூலை 1 முதல் அமலுக்கு வந்ததுள்ளதாகவும் இவை 2025 ஜூன் 30 வரை 4 ஆண்டு காலத்துக்கு அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: