சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிடுக... வி.சி.க. வலியுறுத்தல்

திருமாவளவன்

இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன.

 • Share this:
  சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயாலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

  சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தொல். திருமாவளவன் தலைமையில் நேற்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசு காலந்தாழ்த்தாமல் சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  அதன்படி, தமிழ்நாட்டுச் சிறைகளில் உள்ள 14 ஆண்டுகள் சிறைவாசம் முடித்த சிறைவாசிகள் அனைவரையும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி விடுவிக்க வேண்டுமென  விசிக வலியுறுத்தியுள்ளது.

  மேலும், பஞ்சமி நிலம் அனைத்தையும் கண்டறிவதற்கிடையில் இதுவரைக் கண்டறியப்பட்டுள்ள நிலங்களை ஆதிதிராவிட மக்களுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறும்  தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

  தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் பட்டியலில் உள்ள சாதிகள் அனைத்தும் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த 26 சாதிகளின் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பாதுகாக்கும்படி  தமிழ்நாடு அரசை விசிக கேட்டுக்கொண்டுள்ளது.

  இந்தியா முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் “சாதிவாரிக் கணக்கெடுப்பு” நடத்தவேண்டும் எனக் கோரி வருகின்றன. 2011-ல் இந்தியா முழுவதும் சமூக பொருளாதார சாதிவாரிக் கணக்கெடுப்பு (Socio Economic Caste Census - SECC) எடுக்கப்பட்டது. அந்தக் கணக்கெடுப்பில் மற்ற விவரங்களை வெளியிட்டுவிட்டு சாதிவாரி மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களை மட்டும் மத்திய அரசு வெளியிடாமல் வைத்துள்ளதாகவும்,

  Must Read : குடிநீர், பேருந்து, ரேஷன் கடை, பள்ளி என எந்த வசதியும் இல்லாமல் மக்கள் அகதிகள் போல் வாழும் கிராமம்

  இனியும் காலந்தாழ்த்தாமல் அந்த சாதிவாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டுமென மத்திய அரசை விசிக வலியுறுத்தியுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: