• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை!

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை!

விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைமுறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருக்கிறது இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

  • Share this:
வன்னிய சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வரும் காலங்களில் தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக இன்று நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அரசு கல்வி நிறுவனங்களில் உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த உள் இடஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்பட இருக்கிறது.

அதே போல விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைமுறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருக்கிறது. இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் வன்னிய சமுதாய மக்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்தநிலையில் கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் அரசு கல்வி நிறுவனங்களில் உயர் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இந்த உள் இடஒதுக்கீடு முதல் முறையாக அமல்படுத்தப்பட இருக்கிறது.

Also read: சென்னையில் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருந்த முதியோர்களிடம் நூதன மோசடி: முன்னாள் வங்கி ஊழியர் கைது!

அதே போல விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு நடைமுறைகளிலும் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருக்கிறது இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில்  இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: