தமிழகத்தில் 1500க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. சில காவல் நிலையங்களில் பெயர் பலகை வைப்பதற்காக தனியார் நிறுவனம் தானாக முன்வந்து நன்கொடை வழங்கி பெயர் பலகை வைக்கின்றனர். இதனால் அந்த பெயர் பலகைகளில் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன விளம்பரதாரரின் பெயர்கள் பொறிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல் ஆணையர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள சில காவல் நிலைய பெயர் பலகைகளில் தனியார் நிறுவன பெயர்கள் இடம் பெற்றுள்ளதால் மக்கள் மத்தியில் தவறான புரிதல் ஏற்படுகிறது.
எனவே, அனைத்து காவல் நிலைய பெயர் பலகைகளில் காவல்நிலைய பெயரைத் தவிர, விளம்பரதாரரின் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடாது, அவ்வாறு இருந்தால் அதனை உடனடியாக அகற்றி, புதிய பெயர் பலகையை வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும் காவல் நிலைய பெயர் பலகையை வைக்க காவல் நிலைய முன்பணத்தை செலவிட்டு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.