ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணியில் தவறுசெய்யும் அரசு ஊழியர்கள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை அவசியம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

பணியில் தவறுசெய்யும் அரசு ஊழியர்கள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை அவசியம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு...

மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை உயர் நீதிமன்றம்

பணியின் விதிகளுக்கு உட்படாமல் தவறு செய்யும் ஊழியர்களுக்கு உடனடியாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பணியின்போது தவறு செய்யும் ஊழியர்களுக்கு உடனடியாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  கொரோனா பணிக்கு செல்லவில்லை என, திருச்சியில் அரசு ஊழியரான பூமணி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், மனுதாரர் எந்த பணியும் செய்யாமல் மாதம்தோறும் சம்பளத்தில் 50 விழுக்காடு பிழைப்பூதியமாக பெற்று வருவதாகவும். உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு பணம் வீணாவதை தடுத்திருக்கலாம் என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

  எனவே, 4 மாதமாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்காதது குறித்து நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

  மேலும் படிக்க... மாவட்டங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து.. ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை...

  பணியின் விதிகளுக்கு உட்படாமல் தவறு செய்யும் ஊழியர்களுக்கு உடனடியாக குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: High court, Madurai