Home /News /tamil-nadu /

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்துக்கு ரெட் அலர்ட்.. 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மழை

மழை

Red Alert: தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது. 

    தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தமிழகம், , கேரளா ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  தமிழகத்தை பொறுத்தவரை கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.  மழை காரணமாக . நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கும், கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழை காரணமாக முக்கிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, தளி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடியும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 16 அடியும் உயர்ந்துள்ளது. மணி முத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு உள்ளிட்ட அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு 2022 : காவிரி, கொள்ளிடம் படித்துறைகளில் குவிந்த மக்கள்

    கேரளாவில் கனமழை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.  கடலோர மற்றும் உட்புற கர்நாடக பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Karnataka, Kerala, Rain, Red Alert, Tamilnadu

    அடுத்த செய்தி