12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை என கூறப்பட்டுள்ளது.   

news18
Updated: June 24, 2019, 4:00 PM IST
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு
கோப்புப் படம்
news18
Updated: June 24, 2019, 4:00 PM IST
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.

கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் எந்தப் பகுதிக்கும் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை எச்சரிக்கை இல்லை என கூறப்பட்டுள்ளது.   

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 4 சென்டிமீட்டரும், திருவள்ளூரில் 2 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

திருத்தணி, தேனியில் தலா 2 சென்டிமீட்டர் மழையும், சென்னை விமானநிலையம், புதுச்சேரி, அரக்கோணம், பொன்னேரி, வந்தவாசி, செஞ்சி, ஓசூர்,

மரக்காணம், கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

சென்னையை பொருத்தவரை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also see...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...