அடுத்த ஐந்து நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்!

சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: June 26, 2019, 12:26 PM IST
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. அடுத்த ஐந்து நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நேற்றும் இரவில் மழை பெய்தது. சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான ஆவுடையார்கோவில், பெருங்காடு தொண்டைமானேந்தல், நாகுடி, சுப்பிரமணியபுரம், மன்னகுடி பகுதியில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று இரவு திடீரென மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு திடீரென இடி, மின்னல்,காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது .40 நிமிடத்திற்கு மேலாக பெய்த மழையினால், நகர்ப்புற சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது .இம்மழையினால் பொதுமக்கள் மற்றும் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகையில் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. நாகை செல்லூர் புத்தூர் காடம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்ததால் வெயிலில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாகையில் கனமழை பெய்ததை தொடர்ந்து நாகூர் திருமருகல் திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குளிர் காற்று வீசி வருகிறது.

சேலத்தில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருவது சேலம் மாவட்ட மக்களுக்கும் விவசாயிகளுக்கும் ஆறுதலாக உள்ளது. மேலும் கனமழை காரணமாக பிரதான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.கஜா புயலுக்கு பிறகு மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாதால் கடந்த 8 மாதங்களாக பொதுமக்கள் கடும் வெயிலால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணி முதல் காற்றுடன் பலத்த மழை பெய்தது. மயிலாடுதுறை, செம்பனார்கோவில், மங்கைநல்லூர், மணல்மேடு உள்ளிட்ட பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை செய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். மெய்வழிச்சாலையில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது நேற்று மூன்றாவது நாளாக மாலையில், பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகை, திருவாரூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம் என்றும் சென்னையை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also see...

First published: June 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading