சென்னையில் கள்ளக்காதலி தற்கொலை.. காதலன் சோகமுடிவு...

Youtube Video

சென்னை தாம்பரத்தில் கள்ளக்காதலி இறந்த சோகத்தில் இருந்தவர் காதலியின் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பகீர்சம்பவம் அரங்கேறியுள்ளது காதலர்களின் சோகமுடிவிற்கான காரணம் என்ன?

 • Share this:
  லிவ்விங் டூ கெதராக ஐந்தாண்டுகள் வாழ்ந்த கள்ளகாதலர்கள் இருவர் சோகமுடிவை எடுத்துள்ளனர். காதலிக்கு ஏற்பட்ட மற்றொரு காதல்தான் சோகமுடிவிற்கு காரணமா? பின்னணி என்ன?

  சென்னை கிழக்குத் தாம்பரம் மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் 37 வயதான ராபர்ட், திருமணம்மாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளநிலையில்,கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தார்.

  தாம்பரம் அஸ்தினாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 34 வயதான தனலட்சுமி கணவனை பிரிந்து 17 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

  ஒரே பகுதியை சேர்ந்து குடும்பத்தை பிரிந்து வாழும் ராபர்ட், தனலட்சுமி இருவருக்கும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவருக்குமான பழக்கம் கள்ளக்காதலாக வளர்ந்துள்ளது. ஒருகட்டத்தில் தனலட்சுமி வீட்டிலையே ராபர்ட் தங்கி ஒரே குடும்பமாக வாழத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில்தான் தனலட்சுமிக்கு வெறொரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது.

  எப்போது போனில் ஆண் நண்பருடன் பேசும் தனலட்சுமியை ராபர்ட் கண்டித்துள்ளார். இதனால் காதல்கள் இருவருக்கும்  அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலடைந்த தனலட்சுமி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

  தான் கொடுத்த தொல்லையால்தான் தனலட்சுமி தற்கொலை செய்துகொண்டார் என்று சோகத்தில் இருந்துள்ளார் ராபர்ட். கடந்த சனிக்கிழமை இரவு தனலெட்சுமி வீட்டிற்கு ராபர் வந்துள்ளார். வீட்டின் கதவு காலைவரை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்த போது ராபர் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

  உடலை மீட்ட சிட்லபாக்கம் போலீசார் உடற்கூராய்விற்காக சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  மேலும் படிக்க...பட்ஜெட்டில் புதிதாக செஸ் வரி... பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு

  கள்ளக்காதலி இறந்தசோகத்தில் கள்ளகாதலியின் வீட்டிலையே காதலன் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட சோகம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: