கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரையே கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்!

ரங்கநாதனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Web Desk | news18
Updated: July 12, 2019, 10:41 AM IST
கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பரையே கொலை செய்து ஏரியில் புதைத்த கொடூரம்!
புதைக்கப்பட்ட லட்சுமணின் உடலை தோண்டி எடுக்கும் போலீசார்
Web Desk | news18
Updated: July 12, 2019, 10:41 AM IST
தருமபுரியில் கள்ளக்காதல் விவகாரத்தில் பைனான்சியரை அவரது நண்பரே கை, கால்களை கட்டி ஏரியில் புதைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

கிருஷ்ணகிரி மாவட்டம், சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், கடந்த 10 நாட்களாக காணாமல் போயிருந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் லட்சுமணனின் நண்பர் ரங்கநாதன் சரணடைந்து, லட்சுமணனை கொலை செய்து தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகேயுள்ள முக்குளம் ஏரியில் புதைத்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து லட்சுமணனின் சடலத்தை போலீஸார் தோண்டியெடுத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் சின்னமுத்தூரில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த லட்சுமணனுக்கும், தனக்கும் பணம் கொடுத்து வாங்குவதில் நட்புறவு ஏற்பட்டுள்ளதாக ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் தான்  திருமணம் செய்யாமலேயே காவேரிப்பட்டினத்தில் பெண் ஒருவருடன் இணக்கமாக வாழ்ந்து வந்ததாகவும், தனது வீட்டிற்கு வந்த லட்சுமணனுக்கும் அந்த பெண்ணுக்கும்  கள்ளக்காதல் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இது குறித்து பலமுறை லட்சுமணனை கண்டித்தும்  தனது தோழியுடனான கள்ளக்காதலை விடாததால், கடந்த மாதம் 3-ம் தேதி அவரை காரில் கடத்தி வந்து கொலை செய்ததாகவும், பின்பு கை, கால்களைக் கட்டி உப்பு போட்டு முக்குளம் ஏரியில் புதைத்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, ரங்கநாதனை கைது செய்த போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், செல்வந்தராக வலம்வந்த லட்சுமணனிடம் நகையைப் பறிக்கவே கொலை நடந்திருப்பதாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், லட்சுமணன் கொலையில் மேலும் சிலருக்கு தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க... ரத்தத்துக்கு ரத்தம்... பழிக்குப் பழி... என மதுரையில் ஒரு கொடூர கொலை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...