முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கடலூரில் கூவிக்கூவி பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை...!

கடலூரில் கூவிக்கூவி பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை...!

  • 1-MIN READ
  • Last Updated :

கடலூரில் இருசக்கர வாகனத்தில் சென்று பாக்கெட் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது மீண்டும் களைகட்டத் தொடங்கி இருக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூருக்கு பல்வேறு வகையான மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் கடத்தல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் இருசக்கர வாகனங்களில் சென்று கள்ளச்சாராயத்தை கூவிக்கூவி விற்பனை செய்து வரும் காட்சிகள் வெளியாகி இருக்கின்றன.

புதுவையிலிருந்து கள்ளச்சாராயம் கொண்டு வரப்பட்டு, கடலூர் மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விற்பனை குறித்து போலீசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும், அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் ஊர் மக்களால் முன்வைக்கப்படுகிறது.

Also see...

First published:

Tags: Cuddalore