13 கிலோ திமிங்கலம் கொழுப்பு.. கோடிகளில் விலை மதிப்பு.. பெங்களூருவை சேர்ந்த கும்பல் சென்னையில் கைது

கடத்தல்காரர்கள் கைது

திமிங்கலம் கொழுப்பான ஆம்பரை சென்னையில் விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்

 • Share this:
  சென்னை அருகே 13 கோடி மதிப்புள்ள திமிங்கலம் கொழுப்பு பறிமுதல் விற்பனைக்காக வந்த கடலூர், கிருஷ்ணகிரி, பெங்களூரை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  இந்தியாவில் தடை செய்யப்பட்ட திமிங்கலம் கொழுப்பான ஆம்பர் என்ற பொருளை விற்பனை செய்வதற்காக சென்னை வந்த கிருஷ்ணகிரி மற்றும் கடலூரை சேர்ந்த கும்பல் திருப்போரூரில்  வைத்து கைது செய்யப்பட்டனர். இந்தக்கும்பல் திருப்போரூர் பகுதியில் ஒன்றுகூடி சந்திப்பதாக திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

  தகவலின் அடிப்படையில் திருப்போரூர் வனச்சரக அலுவலர் கல்யான், சென்னை வனச்சரக அலுவலர் ராஜேஷ் உள்ளிட்ட வன காவலர்கள் மாறுவேடத்தில் சென்று முதலில் 3 பேர் கொண்ட கும்பலை வளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து ஒரு கும்பல் திமிங்கலம் வாங்க வருவதாக தெரியவந்தது.  அந்த கும்பலை பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்து தங்களிடம் சிக்கிய ஒருவர் செல்போனில் பேசிய வரவழைத்து அவர்களை மேலக்கோட்டையூர் வரவழைத்து மடக்கிப் பிடித்தனர்.

  Also Read:  கள்ளக்காதலுக்காக கணவனை கொலை செய்ய துணிந்த மனைவி - காதலனுடன் கம்பி எண்ணும் பரிதாபம்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ்(34), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த அருள்முருகன்(30), கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ்(30), தாம்பரம் அடுத்த வெங்கபக்கத்தை சேர்ந்த டேனியல்(53), ஸ்ரீபெரும்புதூர் சேர்ந்த ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த ஆதித்யா(43), சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த ராஜன்(51), நெற்குன்றத்தை சேர்ந்த முருகன்48), பூந்தமல்லி அடுத்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த மோகன்(50), கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சதீஷ்குமார்(50) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

  Also Read:  நள்ளிரவில் கறிக்கோழி கேட்ட போலீஸ் - போனை எடுக்காத கறிக்கடைக்காரருக்கு அடி உதை

  கைதான அவர்களிடமிருந்து 13 கிலோ ஆம்பர், இரண்டு இருசக்கர வாகனங்கள், ஒரு கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட ஆம்பர் மதிப்பு 13 கோடி என வன அலுவலகர்கள் தெரிவித்தனர். கைபற்றப்பட்ட ஆம்பர் வாசனை திரவியங்கள், ஆபரணங்கள், ஆன்மை விருத்திக்கான மூலிகை மருந்து போன்றவற்றை தயாரிக்க பயன்படுவதாக தெரிவித்தனர்.

  செய்தியாளர்: ப.வினோத்கண்ணன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: