ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் : சட்டவிரோதமாக ஒளிப்பரப்ப தடை

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர் : சட்டவிரோதமாக ஒளிப்பரப்ப தடை

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற VIACOM 18 MEDIA நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சட்டவிரோதமாக பதிவு செய்யவும், ஒளிபரப்பவும் இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  22வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் கத்தார்-ஈக்குவடார் நாடுகள் மோதவுள்ளனர். இந்த நிலையில் சட்ட விரோதமாக உலக கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்ப 12,000 இணையதளங்களுக்கு தடை விதித்து சென்னை  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

  இந்தியா உள்ளிட்ட நாடுகளில் போட்டிகளை ஒளிபரப்ப உரிமம் பெற்ற VIACOM 18 MEDIA நிறுவனம் பெருந்தொகையை முதலீடு செய்து உரிமம் பெற்று உலக கோப்பை கால்பந்து போட்டியை ஒளிப்பரப்பு செய்ய உரிமம் பெற்றுள்ளது.

  இதையும் படிங்க: ரோகித் சர்மாவிடம் இருக்கும் டி20 கேப்டன் பதவியை பறிக்க முடிவு? பல அதிரடி முடிவுகளை எடுக்க பிசிசிஐ திட்டம்?

  இந்த நிலையில் இணையதளங்கள் சட்டவிரோதமாக உலக கோப்பை கால்பந்து போட்டியை சட்டவிரோதமாக ஒளிப்பரப்பும் என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வயாகாம் 18 மீடியா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  உலக கோப்பை கால்பந்து போட்டியை சட்டவிரோதமாக பதிவு செய்யவும்,  ஒளிப்பரப்பு செய்யவும் 12,000 இணைய தளங்களுக்கு  தடை விதித்து அதிரடி உத்தரவை  பிறப்பித்துள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Chennai High court, FIFA, FIFA World Cup 2022