தாம்பரம் பைப்பாஸில் சட்டவிரோத ஆட்டோ ரேஸ்.. சீறிப்பாய்ந்த பைக், ஆட்டோக்கள்

ஆட்டோ ரேஸ்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ரேஸ் சட்டவிரோதமாக  நடத்தப்படாமல் இருந்தது.

  • Share this:
    மதுரவாயல்-தாம்ரம் பைப்பாஸ் அதிகாலையில் சட்ட விரோதமாக ஆட்டோ ரேஸ் நடத்தியுள்ளனர்.

    இன்று காலை மதுரவாயல்- தாம்பரம்  பைபாஸில் ஆட்டோ ரேஸ் நடைபெற்றது இதில் 10க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட பைக்குகள் பங்கேற்று சிலர் இந்த ஆட்டோ ரேசை  சட்டவிரோதமாக நடத்தினர்  .மேலும் மதுரவாயல் முதல் தாம்பரம் வரை  இந்த ஆட்டோ  ரேசானது  பந்தய தூரமான துவக்கப்பட்டு 2000 முதல் 3000 வரை பந்தயம் வைக்கப்பட்டு இன்று அதிகாலை  5 முதல் 6 வரை  நடைபெற்றுள்ளது.

    Also Read: ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1500 கிலோ ஆவின் ஸ்வீட் பார்சல்.. ஆதாரம் இருக்கு - அமைச்சர் நாசர் குற்றச்சாட்டு

    கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆட்டோ ரேஸ் சட்டவிரோதமாக  நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்பொழுது வாகன போக்குவரத்துகளுக்கு  தளர்வுகள்  அளிக்கப்பட்ட  நிலையில்  மீண்டும் இன்று இந்த ஆட்டோ ரேஸ்  ஆனது சட்டவிரோதமாக சிலர் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற ஆட்டோ ரேசில் இதே பைப்பாஸில்  பந்தயம் வைத்த போது பந்தயத்தில் பங்கேற்ற ஒருவர் ஆட்டோ கவிந்து லாரியில் மோதி சம்பவ இடத்திலே  உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .அதன் பிறகு போலீசார் தீவிர நடவடிக்கையால் சம்பந்தபட்டவர்கள் கைது செய்யப்பட்டு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டது  என்பது  குறிப்பிடத்தக்கது .தற்போது மீண்டும் கொரானோ தாக்கம் குறைந்து உள்ள நிலையில் சிலர் சட்டவிரோதமாக இது போன்ற செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    செய்தியாளர்: சோமசுந்தரம். 



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: