அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் 2020 முதல் மார்ச் 2021 வரை 236 பேர் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டு மேலாளர், துணை மேலாளர் இளநிலை பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணிகளில் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தகுதியில்லாத பலர் பணி நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்றன. பணிக்கு ரூ.10 முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜூலை 2021ல் அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் உள்விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் கடந்த 2ஆம் தேதி பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டவிரோதமாக வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக 26 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆவின் பரிந்துரைத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணியிடங்களை கையாள்வதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுபோலவே விருதுநகர், தேனி, திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களின் நிர்வாகக் குழுக்களைக் கலைத்து, கல்விச் சான்றுகளை சமர்ப்பிக்காத திருப்பூர் மாவட்டச் சங்க செயல் அலுவலர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் ஆவின் பரிந்துரைத்துள்ளது.
மேலும் விருதுநகர், திருச்சி, நாமக்கல் மாவட்ட தொழிற்சங்கங்களில் பணிபுரிய தகுதியற்ற 6 பணியாளர்களுக்கு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிக்கவும் ஆவின் உத்தரவிட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.