கூலித்தொழிலாளி சடலமாக கண்டெடுப்பு.. விசாரணை வளையத்தில் கள்ளக்காதலன்

கொலை செய்யப்பட்ட பெண்

கூலித்தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கள்ளக்காதலன் போலீஸ் நிலையத்தில் சரண்.

  • Share this:
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே சூரப்பள்ளி பழக்கனூரை சேர்ந்த  தம்பதி ராஜேந்திரன் - பெரியக்காள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேந்திரன் அதே பகுதியில் உள்ள தேங்காய் மண்டியில் நார் உரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார் இவரது மனைவி பெரியக்காளும் அதே தேங்காய் மண்டியில் வேலைபார்த்து வந்துள்ளார்.

Also Read: நான் ஒரு ஐபிஎஸ்.. குஜராத் டிஐஜி.. என்கிட்ட காசுகேட்குற.. மோசடியில் ஈடுபட்ட டிப்டாப் ஆசாமி கைது

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெரியாக்களும் அதே மண்டியில் வேலைபார்த்து வந்த டிரைவர் சுரேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இதன்காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சுரேஷிடம் பழுகுவதை நிறுத்துமாறு ராஜேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். கள்ளக்காதலை பெரியக்காள் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பெரியக்காள் அருகில் உள்ள கடைக்கு  பால் வாங்கிவருவதாக கூறி சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் விசாரித்துள்ளனர். அவரைப்பற்றி தகவல் கிடைக்காததால் தொடர்ந்து அவரை தேடி வந்தனர்.

Also Read: பெண் காவலருடன் கள்ளத்தொடர்பு.. காதல் மனைவியை அடித்துவிரட்டிய கணவன் - குழந்தையுடன் நடுத்தெருவில் நிற்கும் பெண்

இதனிடையே அப்பகுதியில் உள்ள முட்புதரில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக  கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் ஜலகண்டபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் .மேலும் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் விசாரணையில் கொலை செய்யப்பட்டு இறந்தது பெரியக்காள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கணவர் ராஜேந்திரனை காவல்நிலையம் அழைத்து  சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கள்ளகாதலன் சுரேஷ்  தலைமறைவாக இருந்ததால் காவல் துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் சுரேஷ் இன்று ஜலகண்டபுரம் காவல்நிலையத்தில் சரண் அடைந்து உள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: