உல்லாசத்துக்கு அழைத்த இளம்பெண்.. உற்சாகத்துடன் சென்ற பேப்பர் ஏஜெண்ட்- கதவை திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

மாதிரிப்படம்

'கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்" என இளம்பெண் அழைத்ததை நம்பி சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.

  • Share this:
    ஆவடியில் உல்லாசத்திற்கு அழைத்து, வாலிபரிடம் 15சவரன் நகை பறிப்பு தொடர்பாக இருவரை கைது செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான தம்பதியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    சென்னை, அடையாறு, சாஸ்திரி நகர், 7வது தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (39). இவர், நியூஸ் பேப்பர் ஏஜென்ட். இதற்கிடையில், கடந்த 5மாதத்துக்கு முன்பு எழும்பூரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்று உள்ளார். அப்போது, ஆவடி பகுதியை சேர்ந்த பெர்சோனா (23) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பிறகு, அவர்கள் இருவரும் அடிக்கடி செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வந்து உள்ளனர்.

    Also Read:  மீன் குழம்பால் வந்த தகராறு.. தூக்கில் தொங்கிய கணவர் - குடும்பத்தினர் அதிர்ச்சி

    இந்நிலையில் கடந்த 28ந்தேதி பெர்சோனா செந்தில்குமாருக்கு தொடர்பு கொண்டு, "எனது கணவர் வீட்டில் இல்லை. நீங்கள் வீட்டுக்கு வாருங்கள்" என அழைத்துள்ளார். இதனையடுத்து, செந்தில்குமார் தனது காரில் அங்கு சென்றுள்ளார். பின்னர், அவர் வீட்டுக்குள் சென்ற போது, அங்கு இளம்பெண் உள்பட 4பேர் இருந்துள்ளனர். பின்னர், அவர்கள் செந்தில்குமாரை மிரட்டி, அவரது போனில் உள்ள "கூகுள் பே" மூலமாக ரூ.13ஆயிரம் பணத்தை, மற்றொரு வங்கி கணக்கிற்கு பரிவர்த்தனை செய்து உள்ளனர். மேலும், அவர் அணிந்திருந்த  தங்க சங்கிலிகள், பிரேஸ்லெட், மோதிரம் உள்பட 15சவரன் நகைகள் மற்றும் 2செல்போன் ஆகியவை பறித்து உள்ளனர்.

    பின்னர், அவர்கள் அனைவரும் செந்தில்குமார் கண்ணை கட்டி, அவரது காரில் ஏற்றி மதுரவாயல் பைபாஸ் சாலையில் விட்டனர். பின்னர், அவர்கள் அனைவரும் அங்கு வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். செந்தில் குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த வழக்கு தொடர்பாக, ஆவடி, காந்தி நகர், எம்.ஜி.ஆர் தெருவை சேர்ந்த சரவணன் (25), பட்டாபிராம், லெட்சுமி நகர், முல்லை தெருவை சேர்ந்த அஜித்(24) ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். மேலும், முக்கிய குற்றவாளியான கணவன், மனைவியை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

    செய்தியாளர்: கன்னியப்பன்


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: