Home /News /tamil-nadu /

பியூட்டி பார்லரில் வேலைக்கு வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கண்டித்த மனைவியை கைவிட்ட காதல் கணவன் - நிற்கதியாய் நிற்கும் பெண்

பியூட்டி பார்லரில் வேலைக்கு வந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு.. கண்டித்த மனைவியை கைவிட்ட காதல் கணவன் - நிற்கதியாய் நிற்கும் பெண்

அஜய் சத்யா

அஜய் சத்யா

பியூட்டி பார்லர் நடத்தும் கணவர் பிரிந்து வாழும் நிலையில் அங்கு பணிபுரியும் பல பெண்களுடன் கள்ள உறவில் உள்ளதாக கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

  திருமணம் செய்து தன்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள தனது கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி துணை ஆணையர் அலுவலகத்தில் வளாகத்தில் இளம்பெண் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  சென்னை அம்பத்தூர் புதூரை சேர்ந்தவர் அஜய் சத்யா (34) இவர், அதே பகுதியில் டோனி அண்ட் காய்ஸ்  என்ற அழகு நிலையம் நடத்தி வருகிறார். இவரது கடையில் திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கவிதா (25) என்பவர் வேலை பார்த்தார்.  இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இதன்பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர்.பின்னர்,கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் 23 ந்தேதி திருவள்ளூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

  பின்னர், இருவரும் அழகு நிலையத்தின் மாடி வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.  இதற்கிடையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தண்டையார்பேட்டையை சேர்ந்த, சிந்து என்ற இளம்பெண் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார்.அவருடன் அஜய் சத்யாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை தெரிந்து கொண்ட கவிதா இருவரையும் கண்டித்துள்ளார்.

  Also Read: போலீஸ் விசாரணையில் இருந்த இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்த சகோதரி

  இதனால் அஜய் சத்யா, கவிதாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, கடந்த 1 மாதத்திற்கு முன்பு கவிதா பெற்றோர் வீட்டுக்கு வந்து தஞ்சம் புகுந்துள்ளார்.அதன் பிறகும், இருவரும் சேர்ந்து அடிக்கடி செல்போனில், அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இத குறித்து அவர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசாரின் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.இதனால் கவிதா மன உளைச்சலில் இருந்துள்ளார்.

  இந்நிலையில், நேற்று ஆவடியில் உள்ள துணை ஆணையர் அலுவலகத்திற்கு வந்த கவிதா பின்னர், அவர் அங்கு தன் உடலின் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த, பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டனர்.
  பின்னர்  அவரை துணை ஆணையர் அலுவலகத்துக்கு உள்ளே அழைத்து சென்றனர். அதன் பிறகு, கவிதாவிடம் சுமார் 1 மணி நேரம் துணை ஆணையர் மகேஷ் இடம்  விசாரணை நடத்தினர்.

  Also Read:  3 கோடி பேரம்.. இன்னோவா காருடன் கடத்தப்பட்ட ரைஸ்மில் அதிபர் மகன் - கடத்தல்காரர்கள் போலீசில் சிக்கிய பின்னணி

  அப்போது, அவர் தன்னை சாய் சத்யாவும் சிந்துவும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறினார். இதனை கேட்டுக்கொண்ட துணை கமிஷனர் மகேஷ் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

  இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் கவிதா கூறும்போது,நான் இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 3 மாதத்தில் உரிமையாளர் அஜய் சத்தியா என்னை விரும்பி திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவர் அழகுநிலையத்தில் வேலைக்கு வரும் பல பெண்களிடம் தொடர்ச்சியாக தவறாக நடந்து கொள்கிறார். இந்த நிலையில் புது வீடு கட்டுவதாக கூறி திடீரென என்னை எனது பெற்றோர் வீட்டில் விட்டு சென்றார். கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி வரை அவருடன் பேசிக்கொண்டு தான் இருந்தேன்.இந்த நிலையில் இப்போது என்னை தேவை இல்லை என்று ஒதுக்கி விடுகிறார். அவர் அழகுநிலையத்தில்  தற்போது பணியாற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அவர்கள் அந்த அழகுநிலையத்தின் மேலேயே வீடுகட்டி அங்கு தற்போது இருவரும் தங்கி இருக்கின்றனர். எனது கணவருடன் இருக்கும் அந்த பெண் அவருடைய நண்பர்களை வைத்து எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து ஆவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் என் பெற்றோர்கள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். தற்போது நான் எந்த ஆதரவும் அல்லாமல் அனாதையாக நிற்கிறேன் எனவும்.

  இதனால் என்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிய அஜய் சத்தியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து மனு கொடுத்துள்ளேன் என்று கூறினார். மேலும், இதுபோல எந்த சலூன்களிலும் அநியாயங்கள் நடைபெறக் கூடாது என்று கண்ணீர் மல்க அவர் கூறினார். துணை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  செய்தியாளர்: கன்னியப்பன்   உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published:

  Tags: Crime | குற்றச் செய்திகள், Illegal affair, Illegal relationship, Love

  அடுத்த செய்தி