பல ஆண்களுடன் தொடர்பு.. தடையாக இருந்த கணவனையும் பிள்ளைகளையும் பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி

பிரியா.

ஆண் நண்பர்களுடன் உல்லாசமாகச் செல்வதற்குத் தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி எரித்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட சோமநாயக்கன்பட்டி ஊராட்சி எல்லாப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (38). இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பிரியா (28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, பிரதீப் (11), பிரித்திக்கா (9) என இரண்டு பிள்ளைகள் உள்ளன.

  குவைத்தில் வெளிநாட்டில டவர் அமைக்கும் பணியில் பணியாற்றி வந்தள்ள சசிகுமார், கடந்த ஆகஸ்ட் மாதம் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், தன் மனைவி பிரியா செல்போனில் பலரிடம் பேசி வந்துள்ளதைக் கண்டு அவரிடம் விசாரித்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

  பிள்ளைகள் அப்பாவிடம் அம்மா அடிக்கடி வெளியில் சென்று வந்துள்ளதாகக் கூறியதால் ஆத்திரமடைந்த சசிக்குமார், மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணி அளவில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சசிக்குமார் வீட்டுக்கு வந்து பார்த்துள்ளனர்.

  அப்போது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த சசிகுமார் மற்றும் குழந்தைகள் மீது தண்ணீரை ஊற்றி அணைத்து அவர்களை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டதை அடுத்து, சசிகுமார் 80 சதவீதம் தீக்காயங்களுடன் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த சசிகுமார சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  Also read: வீடுகளை இடிக்க எதிர்ப்பு... கூவம் ஆற்றில் இறங்கி குடிசைவாசிகள் போராட்டம்

  இதற்கிடையில் சசிகுமார் குடும்பத் தகராறில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு பிள்ளைகளையும் என்னையும் அதை ஊற்றி எரித்ததாகக் கூறியுள்ளார் மனைவி பிரியா. சிறு காயங்களுடன் இருந்த பிரியாவிடன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். மேலும் சந்தேகமடைந்த போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் பிரியா நடந்த உண்மையை கூறியுள்ளார்.

  கணவர் மது போதையில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர் மீதும் பிள்ளைகள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் பிரியா. மேலும் கூறுகையில், அவ்வப்போது செல்போன் மூலம் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும், கணவர் வெளிநாட்டில் இருந்து வீட்டுக்கு வந்ததால் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாகவே இப்படியான கொலை முயற்சியை மேற்கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

  இதையடுத்து, சசிகுமாரின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரியா மட்டுமே இச்செயலை செய்தாரா, அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் துணையோடு இதைச் செய்தாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: