• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • செல்போன் பேச்சு.. தவறான உறவு - கிரைண்டர்கல்லை போட்டு மகளை கொலை செய்த தாய்

செல்போன் பேச்சு.. தவறான உறவு - கிரைண்டர்கல்லை போட்டு மகளை கொலை செய்த தாய்

கொலை

கொலை

தாயார் வீட்டிற்கு வந்தும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை பல்வேறு நபர்களிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

  • Share this:
    தவறான உறவில் இருந்த மகளை தாயே  தலையில் கல்லை போட்டுக்கொலை  பல முறை கூறியும்  தொடர்புகளை துன்டிக்காததால் நிகழ்ந்த விபரீதம்.

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை  கணுவாய்ப்பாளையம் பகுதியில் வசிப்பவர் நாகமணி (வயது 47 ). கணவர் இறந்து விட்டார்.இவருக்கு மகாலட்சுமி என்ற நதியா ( வயது 31 ) என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கும் புளியந்தோப்பு சோமையனூரை சேர்ந்த சரவணகுமார் என்பவருக்கும்  திருமணம் நடந்து 15 ஆண்டுகள் ஆகியுள்ளது. இவர்களுக்கு பிரியதர்ஷினி(13) என்ற மகளும்,நிதீஷ் குமார்(12) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் சரவணகுமார் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

    சரவணகுமார் இறந்ததிலிருந்து நதியா தனது தாய் வீடான கணுவாய்ப்பாளையம் பகுதியில் தாயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நதியா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டு இருப்பதாகவும்,  இதனால் அவருடைய குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை என்றும், நாகமணி தன்னுடைய பேரக்குழந்தைகளை தானே வளர்ப்பதாக மகாலட்சுமியை கண்டித்து வீட்டைவிட்டு அனுப்பி விட்டார்.

    Also Read:  உளுந்தூர்பேட்டையில் ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கழுத்தை நெரித்து கொலை.. குற்றவாளியை காட்டி கொடுத்த காது கேளாதோர் கருவி..

    இந்நிலையில் தனது தாயார் வீட்டிற்கு வந்தும் நதியா அதிகமாக செல்போனில் பேசுவதை விடவில்லை பல்வேறு நபர்களிடம் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்காரணமாக நதியாவிற்கும், அவருடைய தாய் நாகமணிக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், நதியாவிற்கும்,தாய் நாகமணிக்கும்  இருவருமே குடிப்பழக்கம் இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நதியா தனது தாயை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் மகளிடம் கோபித்துக்கொண்டு தனது அக்கா வீட்டிற்கு சென்று விட்டு நேற்று தான் வீடு திரும்பியுள்ளார்.

    Also Read:  கள்ளநோட்டு கொடுத்து மதுவாங்கிய குடிமகன் - உஷாரான டாஸ்மாக் ஊழியர்

    இந்நிலையில் நேற்றிரவும் இருவரும் மதுபோதையில் இருந்ததாகவும்,நீ ஏன் அடிக்கடி செல்போன் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.சிறிது நேரத்தில் இருவரும் படுத்து உள்ளனர். இந்நிலையில் ஆத்திரம் அடங்காத நாகமணி இன்று அதிகாலை  தூங்கிக் கொண்டிருந்த தனது மகளை ஆட்டுக்கல்(மாவு ஆட்டும் கல்) மூலம் பின்னந்தலையில்  தூக்கி போட்டு கொலை செய்துள்ளார்.

    இச்சம்பவம் குறித்து  காரமடை காவல் துறையினர் மற்றும் தடயவியல் துறையில் இருந்து விரைந்து வந்து சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும்,சம்பவ இடத்தை மேட்டுப்பாளையம் டிஎஸ்பி ஜெய்சிங் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.மேலும்,தாய் நாகமணியை கைது செய்த  காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குடிபோதையில் பெற்ற தாயே தனது மகள் தலையில் குளவிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     செய்தியாளர் - எஸ். யோகேஷ்வரன்  ( மேட்டுப்பாளையம்)


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: