முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இல்லம் தேடி கல்வி திட்டம் - சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

இல்லம் தேடி கல்வி திட்டம் - சிறப்பு கண்காணிப்பு அதிகாரியை நியமித்தது தமிழக அரசு

இளம்பகவத்

இளம்பகவத்

இளம்பகவத் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்டுள்ள கற்றல் பாதிப்பினைக் குறைக்கவும், சரிசெய்யவும் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இல்லம் தேடி கல்வி திட்டத்தின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இளம்பகவத் உட்பட 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "திருப்பூர் மாவட்டம் தாராபுரம் துணை ஆட்சியராக இருந்த ஆனந்த் மோகன் ஐஏஎஸ், கோவை மாவட்ட வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.கோவை மாவட்ட வணிகவரி (மாநில வரிகள்) இணை ஆணையராக இருந்த எஸ். மெர்சி ரம்யா, ஐஏஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டு, சென்னை வணிக வரிகள் இணை ஆணையராக (உளவுத்துறை-I), நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குநர் (WB & ADB திட்டம்) இளம்பகவத், இடமாற்றம் செய்யப்பட்டு, இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.பட்டுக்கோட்டை துணை ஆட்சியராக இருந்த பாலச்சந்தர், ஐஏஎஸ், இடமாற்றம் செய்யப்பட்டு, மின் ஆளுமையின் இணை இயக்குனராக (கூடுதல் பொறுப்பாக) நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை நிர்வாக அதிகாரியாகவும் செயல்படுவார்.ஓசூர் துணை ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஐஏஎஸ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் (சிப்காட்) செயல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உதகமண்டலம் துணை ஆட்சியர் டாக்டர். மோனிகா ராணா, ஐஏஎஸ், உதகமண்டலம் மலைகள் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி துணை ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, ஐஏஎஸ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் திட்ட இயக்குனராக (உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கித் திட்டம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்", என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Corona, Education, Education department, Iraianbu IAS, Online class, Tamilnadu