முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருக்குறளில் இருந்து உருவான இளையராஜா பாடல் - சுவரஸ்யமான வீடியோ!

திருக்குறளில் இருந்து உருவான இளையராஜா பாடல் - சுவரஸ்யமான வீடியோ!

‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல்  உருவான சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார் இளையராஜா.

‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார் இளையராஜா.

‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவான சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார் இளையராஜா.

  • 1-MIN READ
  • Last Updated :

    திருக்குறளில் இருந்து ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் உருவானதாக இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.

    சந்தானம் மற்றும் அனகா நடிப்பில் வெளியான டைம் டிராவல் நகைச்சுவை திரைப்படம் 'டிக்கிலோனா' சமீபத்தில் வெளியாகியது. OTT-யில் வெளியான இந்தப் படத்திற்கு இளம் மேஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்த ஆல்பத்தின் 'பேர் வச்சாலும் வைக்கமா போனாலும்' ரீமிக்ஸ் பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதோடு சமீப காலங்களில் ரசிகர்களிடத்தில் பிரபலமான பாடலாகவும் மாறியுள்ளது.

    இந்த ரீமிக்ஸ் பாடல் யூ-ட்யூபில் 1 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ‘பேர் வச்சாலும்’ பாடல் குறித்த சுவாரஸ்ய தகவலை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பேசிய இசைஞானி இளையராஜா, ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்’ பாடல் திருவள்ளுவரின் ‘துப்பார்க்கு துப்பாய’ குறளில் இருந்து உருவான சுவாரஸ்ய தகவலை தெரிவித்துள்ளார்.

    இந்தப் பாடல் கமல் ஹாசன் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்றிருந்தது. 90-களில் தமிழ் சினிமாவில் இசைஞானி இளையராஜா இசையமைத்த எவர் கிரீன் பாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பாடலை மறைந்த பாடலாசிரியர் வாலி எழுதியது குறிப்பிடத்தக்கது.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published: