முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இளையராஜா சாமி தரிசனம்!

இளையராஜா

இளையராஜா

New Year 2021 | இளையராஜா தனது ‘ராஜா ஸ்டுடியோ’வில் இருந்து, மக்களுக்கு இனிமையான இசைப்படைப்புகளை வழங்க வேண்டும் என்பது 2021 புத்தாண்டு எதிர்பார்ப்பாக உள்ளது.

  • Last Updated :

2021 ஆங்கில புத்தாண்டு தினமன இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்.

2021-ஆம் ஆண்டு மக்களுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் ஆண்டாக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. அந்த வகையில் பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இசைஞானி இளையராஜா மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

தமிழக மக்களை மட்டும் அல்லாது, உலக மக்களையே தனது இசையால் அரவணைத்து இதயத்தில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் இளையராஜா. இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசையமைத்த இடமாகிய பிரசாந்த் ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டிய சூழல் கடந்த ஆண்டின் இறுதியில் ஏற்பட்டது. இது அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு மட்டுமன்றி இவரின் இசை ரசிகர்களுக்கும் இது துயரமான சம்பவமாகவே இருந்தது.

top videos

    இந்நிலையில், அவர் கோடம்பாக்கத்தில் ‘ராஜா ஸ்டுடியோ’வை தயார்படுத்தும் வேலைகளில் இறங்கினார். இந்த புத்தாண்டில் நிம்மதியுடனும், உற்சாகத்துடனும் இளையராஜா தனது ‘ராஜா ஸ்டுடியோ’வில் இருந்து மக்களுக்கு வெல்லற்கு அரிய இசைப்படைப்புகளை  வழங்க வேண்டும் என்பது, ரசிகர்களின்  2021 புத்தாண்டு எதிர்பார்ப்பாக உள்ளது.

    First published:

    Tags: Ilaiyaraja, Madurai, New Year 2021