Home /News /tamil-nadu /

''அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா; சர்ச்சைகள் வேண்டாம்'' - டிடிவி தினகரன் கருத்து

''அரசியலுக்கு அப்பாற்பட்டவர் இளையராஜா; சர்ச்சைகள் வேண்டாம்'' - டிடிவி தினகரன் கருத்து

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்

அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது.

    மோடி - அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறியது, அவருடைய சொந்த கருத்து என்றும் அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் 'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னுரையாக இளையராஜா எழுதியதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளையராஜா தனது முன்னுரையில், 'பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

    சமூக நீதி தொடர்பாக பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

    இதையும் படிங்க - அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு பேச்சு: இளையராஜாவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆதரவு

    அம்பேத்கரையும், மோடியையும் குறிப்பிட்டிருந்த இளையராஜாவின் கருத்து கடும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது. இதில் பல்வேறு தரப்பினர் இளையராஜாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் இளையராஜாவின் கருத்தை ஆதரித்துள்ளார்கள். இந்த விவகாரம் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது-

    மோடி - அம்பேத்கர் குறித்து இளையராஜா கூறியது, அவருடைய சொந்த கருத்து. அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த அரசியல் சர்ச்சையிலும் சிக்காதவர். அவருடைய தனிப்பட்ட கருத்தை அவர் எழுதியுள்ளார். இதை சர்ச்சைக்குள்ளாக்குவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க - ஆளுநர் கொடுத்த விருந்தை புறக்கணித்தால் தமிழை புறக்கணித்ததாக அர்த்தம் - ஜெயக்குமார்‌

    இதேபோன்று, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னரான தமிழிசை சவுந்தர ராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இணையற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் பார்புகழும் பாரதப் பிரதமரை அண்ணல் அம்பேத்கருக்கு ஒப்பிட்டு அவர்தம் அடிமனதிலிருந்து வெளிவந்த உணர்வுகளை இங்கே தமிழகத்தில் வெறுப்பு அரசியல் விதைக்கும் சிலர் அவரை சுடு சொற்களால் விமர்சிப்பது சரியா?

    கருத்து சுதந்திரம் சில கருத்துக்களுக்கு மட்டுமா? அல்லது சிலருக்கு மட்டும் தானா? தன் கருத்தை சொல்ல இசைஞானி இளையராஜாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது என்பதை உரக்கச் சொல்வோம்.' என்று கூறியுள்ளார்.

     
    Published by:Musthak
    First published:

    Tags: Ilayaraja, TTV Dinakaran

    அடுத்த செய்தி