இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... குவியும் பாராட்டு - நன்றி தெரிவித்த ராஜா
இளையராஜாவுக்கு எம்.பி. பதவி... குவியும் பாராட்டு - நன்றி தெரிவித்த ராஜா
இசைஞானி இளையராஜா
Ilayaraja : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் 12 பேர் நியமன உறுப்பினர்களாக இருக்கின்றனர். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் எம்.பிக்களாக நியமித்துள்ளார்.
அரை நூற்றாண்டுகளாக தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றுபவர் இளையராஜா. அவர் பல ஆண்டுகள் தமிழ் திரையுலகின் இசைத்துறையில் அரசாட்சி செய்து வந்தார். அவர் 1000 படங்களுக்கு மேலாக இசையமைத்துள்ளார். 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
79 வயதாகும் இளையராஜாவை இந்திய அரசு 2010 ஆம் ஆண்டு பதம் பூஷன் விருது வழங்கி கவுரவித்தது. அதன் பின் 2018 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இளையராஜாவை வாழ்த்தி டிவிட்டரில் பதிவிட்ட பிரதமர் நரேந்திர மோடி, “சாதாரண பின்னணியில் இருந்து வந்து மிகப் பெரிய சாதனை படைத்துள்ளார் இளையராஜா. இசையின் மூலம் மனித உணர்வுகளை அழகாய் பிரதிபலித்தவர் இளையராஜா. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
I express my sincere gratitude for the thoughts @narendramodi ji
It is a honour and opportunity to make the beauty of music, art and culture reach the length and breadth of our society. https://t.co/2vI2sVXxmk
பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு பதிலளித்துள்ள டிவிட்டரில் பதிவிட்டுள்ள இளையராஜா, “மோடிஜியின் எண்ணங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இசை, கலை மற்றும் கலாச்சாரத்தின் அழகை நம் சமூகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்பு இது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
என்மீது அன்பு கொண்ட ஏராளமான அபிமானிகள் இந்திய அரசு எனக்களித்த கௌரவமான அங்கீகாரத்திற்காகப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்திருந்த வண்ணமிருக்கின்றனர் .
உங்கள் அனைவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்ல இயலாதாகையால் எல்லோருக்கும்
என் உளங்கனிந்த நன்றி... from Seattle, USA
இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், பாரதிராஜி உள்ளிட்ட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஜினிகாந்த் வாழ்த்து:
ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்துப் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை நண்பர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் @ilaiyaraaja
இளையராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்த பகிர்ந்த பாரதிராஜா, “மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமக்கிப்படள்ள என் உயிர் தோழனுக்கு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.”
இதேபோல சீமான், கமல்ஹாசன், குஷ்பு உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Published by:Suresh V
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.