Home /News /tamil-nadu /

கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை முதல்வர் நிறைவேற்றுவார்.. இளையராஜா புகழாரம்!

கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை முதல்வர் நிறைவேற்றுவார்.. இளையராஜா புகழாரம்!

இளையராஜா - ஸ்டாலின்

இளையராஜா - ஸ்டாலின்

”கருணாநிதியின் வழியில் சென்று கொண்டு இருக்கும் நம்முடைய  முதல்வரும் , கலைஞரின் நீண்டநாள் கனவுகளை  நிறைவேற்றி வைப்பார்”

கலைஞர் கருணாநிதி வழியில் சென்று கொண்டு இருக்கும் நம்முடைய  முதல்வர் , கலைஞரின் நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றி வைப்பார் என்று முழு மனதுடன் நம்புகின்றேன் என கோவை  இசைவிழாவில் இசைஞானி இளையராஜா தெரிவித்தார்.

கோவையில் தனியார் அமைப்பு சார்பில் கொடிசியா வளாகத்தில்   இசைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. தனது பிறந்தநாளில் நடத்தப்படும் இசைநிகழ்வில்  இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு பாடல்கள் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனியார் சார்பில் நடத்தப்படும்  இந்த நிகழ்ச்சி துவங்கும் முன்னதாக தனது பழைய நினைவுகளை இசைஞானி இளையராஜா மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

வாலி எப்படி மோட்சம் அடைந்தார் தெரியுமா? கம்பராமாயணம் குறித்து விளக்கும் பேச்சாளர் மணிகண்டன்

அப்போது பேசிய இளையராஜா, எனது தந்தை எனக்கு வைத்த பெயர் ஞானதேசிகன்.பள்ளியில் சேர்க்கும்  பொழுது ராசய்யா  என்று கூப்பிட எளிதாக இருக்கும் வகையில் எழுதினார்கள். ராசய்யா என்ற பெயரை விஷன் மியூசிக் மாஸ்டர் "ராஜா" என்று மாற்றினார். படவாய்ப்பு வந்த பின்னர் பஞ்சு அருணாசலம் என்ன பெயர் போடலாம் என கேட்டார். பாவலர் பிரதர்ஸ் என போடலாம் என சொன்ன போது அது பழமையா இருக்கும்ன்னு சொல்லி, எனது பெயரை "இளையராஜா" என மாற்றினார் என தெரிவித்தார்.

என் பெயர்  நான் வைத்ததில்லை.சிவன் தன்னுடைய பேரை சிவன் என வைத்துக்கொண்டானா?நம்மதான் அவனை சிவன் என அழைக்கின்றோம் என தெரிவித்தார். ஆனால் எங்கப்பா எனக்கு ஞானதேசிங்கன் என பெயர் வைத்ததை கலைஞர் அய்யா, எப்படி கண்டுபிடித்து இசையுடன் சேர்த்து "இசைஞானி" என டைட்டில் வைத்து ஏராளமான மக்கள் இருந்த பொதுக்கூட்டத்தில் வைத்து "இசைஞானி" என பட்டத்தை அளித்தார் என தெரிவித்தார்.

இதை  எப்படி எடுத்து கொள்வது ?  என் தந்தை எனக்கு வைத்த பெயர் கலைஞருக்கு எப்படி தெரிந்தது? எனக்கூறிய அவர், அந்த உணர்வுகளை உணர முடிந்ததுதான் தலைவர் கலைஞரின் சிறப்பு என தெரிவித்தார். கலைஞரின்  வழியில் நம் முதல்வரும்  நாட்டை வழிநடத்தி செல்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது என தெரிவித்த இளையராஜா,அவர் இந்த நாட்டிற்கு செய்வது அனைத்தையும் எனக்கு செய்வதாக எடுத்து கொள்கின்றேன் எனவும், எனக்கு என்று நான் யாரிடமும் எதுவும் கேட்க மாட்டேன், யாரிடமும் எதற்கும் போனதில்லை எனவும் தெரிவித்தார்.

கருணாநிதியின் திருவுருவ படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை..!

கலைஞர் ஐயாவிடம் அவ்வளவு மரியாதை எனக்கு , எனக்கு இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார் என்பதற்கல்ல, தனிபட்ட முறையில் மக்களை முன்னேற்ற பட்ட பாடெல்லாம் அரசியல் வட்டாரத்தில் நன்றாக தெரியும் ,பொது வாழ்விலும் அவர் செய்த நல்ல காரியங்களும் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்த இளையராஜா, அவர் வழியில் சென்று கொண்டு இருக்கும் நம்முடைய  முதல்வரும் , கலைஞரின் நீண்டநாள் கனவுகளை  நிறைவேற்றி வைப்பார் என்று முழு மனதுடன் நம்புகின்றேன் என தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sreeja
First published:

Tags: DMK Karunanidhi, Ilayaraja, MK Stalin

அடுத்த செய்தி