சிவகங்கையில் மணல் கொள்ளை புகார் - லாரிகளை சிறைபிடித்த கிராம மக்கள்

இளையான்குடி அருகே கச்சத்தநல்லுர் கிராமத்தில் 50க்கு மேற்பட்ட மணல் லாரிகளை சிறை பிடித்து கிராம மக்கள் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கச்சத்தநல்லூர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சவுடு மணல், உபரி மணல் என்ற பெயரில் மணல் கொள்கை நடப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இது தொடர்பாக சிலர் மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தும் உள்ளனர்.

இந்நிலையில், விலை அதிகமாகக் கொடுத்து வைகை ஆற்றுப் பகுதியில் பட்டா இடங்களை வாங்கி, சவுடு என்ற பெயரில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளி விற்பனை செய்யப்படுவதாக கிராம மக்களின் குற்றம் சாட்டுகின்றனர். இப்படியே போனால் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனக் கூறி கச்சத்தநல்லுர் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டம் செய்தனர்.

Also read: கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்யுங்கள் - விஜய் சேதுபதி

இளையான்குடி தாசில்தார் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பிறகு, லாரிகள் அனைத்தையும் இளையான்குடி தாலுகா அலுவலகத்திற்குக் கொண்டு செல்ல உத்தரவிட்டார். மேலும், லாரிகளில்  மணல் இருக்கும் பட்சத்தில் லாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தாசில்தார் தெரிவித்ததால் போராட்டத்தை கிராம மக்கள் கைவிட்டு களைந்து சென்றனர்.
Published by:Rizwan
First published: