பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே என இளையராஜாவை ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்திருந்த நிலையில், இந்த சாதிய மனநிலை அதுவும்
பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்துக்குரியது என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், 'மோடியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், பிரதமர் மோடி அம்பேத்கருக்கு இணையானவர் என்றும் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
முத்தலாக் தடைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனவும் கூறியிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் முன்னுரை கடந்த சில நாள்களாக கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.
இளையராஜாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இளையராஜாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் இணையத்தில் அனல் பறந்தது.
தம்பி விக்னேசைக் கொன்று, உடலை எரித்து செய்தியை மறைப்பதுதான் சமூக நீதியா? திராவிட மாடல் ஆட்சியா? – சீமான் கேள்வி
இதனிடையே, அண்மையில் ஈரோட்டில் திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுகூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும், புகழும் வந்த பிறகு தன்னை உயர்ஜாதி என நினைத்து கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும் என இளையராஜாவை குறிப்பிட்டு, ஒருமையில் பேசி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? என இயக்குநர் பா.ரஞ்சித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இயக்குநர் ரஞ்சித் தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, 'பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி.வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..?
இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.