Home /News /tamil-nadu /

உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? - இளையராஜாவை காட்டமாக விமர்சித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி

உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? - இளையராஜாவை காட்டமாக விமர்சித்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி

இளையராஜாவை காட்டமாக விமர்சித்த கம்யூனிஸ்ட்

இளையராஜாவை காட்டமாக விமர்சித்த கம்யூனிஸ்ட்

Ilaiyaraaja | உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? ? என இளையராஜா குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சுப்பராயன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

    அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா பேசியது குறித்து திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இளையராஜாவை விமர்சனம் செய்ததைத் தொடர்ந்து திருப்பூர் எம்.பி சுப்பராயனும் உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா?  என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பெரும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் இருவரையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அன்ட் மோதி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். இந்த முன்னுரை குறித்து திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்எஸ்எஸ் காரர்கள் இளையராஜாவை சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன் என காட்டமாக விமர்சித்திருந்தார்.

    இதனிடையே தற்போது திருப்பூர் எம்.பி சுப்பராயன் பொதுத்தளமான அனைவரும் பயன்படுத்தும் முகநூல் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள கருத்து பேசுபொருளாகியுள்ளது. அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, உப்புக்கல்லும் வைரமும் ஒன்றா? உதவாக்கரையும் உன்னத மாமனிதரும் ஒன்றா? கருப்பு பணம் அதிக அளவில் சேர்ந்து விட்டதால் ஏற்பட்ட அச்சம் காரணமாக இளையராஜாவிற்கு ஏற்பட்ட பிதற்றல் என பதிவிட்டுள்ளார்.

    இதையும் படியுங்கள் |  உதவியாளர் முதல் இசைஞானி வரை - இளையராஜா சுவாரஸ்ய தகவல்கள்!
     இளையராஜா உலகின் மிக அதிக படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர். அவர் இந்திய மொழிகளில் 1000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
    இளையராஜாவுக்கு சிம்பொனி இசைக்குழுவால் 'மேஸ்ட்ரோ' மற்றும் பிரபல அரசியல்வாதியும் முன்னாள் தமிழக முதல்வருமான கலைஞர் மு.கருணாநிதியால் 'இசைஞானி' ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன.

     




    இளையராஜா கிறிஸ்தவராகப் பிறந்து, பின்னர் இந்து மதத்திற்கு மாறியவர். அதே நேரத்தில் அவரது மகன் யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்தை பின்பற்றுகிறார். ரமண மகரிஷி மற்றும் தாய் மூகாம்பிகை ஆகியோரின் தீவிர பக்தர் இளையராஜா.

    திருப்பூர் எம்.பி சுப்பராயன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்தவர். தற்போது இளையராஜா இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியது பாஜகவின் எதிர்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    செய்தியாளர் : பாலாஜி பாஸ்கர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Ilaiyaraja, PM Modi

    அடுத்த செய்தி