சென்னை ஐஐடி பரிசோதனை முயற்சி: நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைக் கொண்டு எழும்பு முறிவுக்கு சிகிச்சை

நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைக் கொண்டு எழும்பு முறிவுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ஐஐடி பரிசோதனை முயற்சி மேற்கொண்டுள்ளது.

சென்னை ஐஐடி பரிசோதனை முயற்சி: நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைக் கொண்டு எழும்பு முறிவுக்கு சிகிச்சை
சென்னை ஐஐடி (கோப்புப்படம்)
  • News18 Tamil
  • Last Updated: September 21, 2020, 8:15 PM IST
  • Share this:
சென்னை ஐஐடியில் நானோ கலவை பூசப்பட்ட மெக்னிசீயம் உலோகத்தைப் பயன்படுத்தி எலும்பு முறிவுகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை பரிசோதனை முயற்சியாக, முயலின் எலும்பு முறிவுகளை சரி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக பெரிய விலங்களுக்கு பரிசோதனை செய்யும் முயற்சியில் சென்னை ஐஐடி ஈடுபட்டுள்ளது. அந்த ஆராய்ச்சியின் முடிவின் அடிப்படையில் மனிதர்களின் உடலில் ஏற்படும் எலும்பு முறிவுக்கும் சிகிச்சை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மெக்னீசியம் எலும்புகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த உலோக கலவையாக இருந்தாலும், எலும்பு பழுதுபார்ப்பில் மெக்னீசியம் உலோகக் கலவைகளின் பயன்பாடு சில சிக்கல்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை ஐஐடியின் பயோடெக்னாலாஜி துறை பேராசிரியர் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினர் மெக்னீசியம் பயன்படுத்தி எலும்பு முறிவு நோய்களுக்கு சிசிக்கை அளிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

Also read: கொரோனாவால் உயிரிழந்த சேலம் உருக்காலை பணியாளரின் குடும்பத்திற்கு வேலை கேட்டு தொழிலாளர்கள் தொடர் போராட்டம்


அதனை முதலில் முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து பரிசோதனை செய்துள்ளனர். இந்த முறையில சென்னை ஐஐடி வெற்றி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மருத்துவ முக்கியத்துவத்தைக் எடுத்துக்காட்டும் விதமாக ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளில் எலும்பு முறிவுகளை சரிசெய்வதில் புதிதாக உருவாக்கப்பட்ட நானோ கலவை பூசப்பட்ட மெக்னீசியம் உலோகத்தைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளனர். அந்த முடிவினை தொடர்ந்து மனிதர்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
First published: September 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading