• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா? அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி

ஐ.ஐ.டி - என்ன மர்ம வளாகமா? அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி: சு.வெங்கடேசன் எம்.பி

ஐ.ஐ.டி மெட்ராஸ்

ஐ.ஐ.டி மெட்ராஸ்

2019 ல் ஒரு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட போது மத பாகுபாடுகள் தான் தனது துயர முடிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

  • Share this:
    அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்றவரை துரத்தி இருக்கிறது சாதி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

    சென்னை ஐஐடியில் உள்ள சாதிய பாகுபாடு காரணமாக கல்லூரியில் இருந்து விலகுவதாக உதவி பேராசிரியர் விபின் புதியதாத் ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பிய மின்னஞ்சல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐ.ஐ.டியின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர்கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம்.

    2019ல் தான் அவர் ஐ.ஐ.டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ.ஐ.டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்! அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்மையில் 'கோவிட் ஊரடங்கின் பொருளாதார தாக்கங்கள்' பற்றி ஒரு கூட்டு ஆய்வுத் தாளை வெளியிட்டு இருந்திருக்கிறார். ஆனால் இவ்வளவு ஆற்றல் மிக்கவரை சாதி துரத்தி இருக்கிறது. இரண்டாண்டுகள் கூட அந்த மாநில வளாகத்திற்குள் அவரால் நீடிக்க இயலவில்லை. ஒரு வேளை அவரின் ஆற்றல்தான் காரணமோ! ஏகலைவனின் பிரச்னையே அவரின் ஆற்றல்தானே!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    2019 ல் ஒரு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட போது மத பாகுபாடுகள் தான் தனது துயர முடிவுக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    ஐ.ஐ.டி என்ன மர்ம வளாகமா? உடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்/ எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தலையிட வேண்டும். இந்த செய்தியை புகாராக எடுத்துக் கொண்டு ஐ.ஐ.டியில் நிலவுகிற ஒட்டு மொத்த சூழலையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசின் காவல்துறை விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    Also read: சென்னை ஐஐடியில் எரிந்த நிலையில் மாணவர் உடல் கண்டெடுப்பு!

    ஐ.ஐ.டிக்கு வெளியே இருந்து 'உண்மையை ஊற்றி மூடாத' நம்பகத்தன்மை கொண்ட நல்ல மனிதர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று ஐ.ஐ.டி மர்மங்களை விசாரித்து வெளிக் கொண்டு வர வேண்டும். விபின் கடிதத்தின் கடைசி வரியில் உள்ள கேள்வி. 'சமூகம் இந்நேரத்தில் ஒரு சின்ன அடியாவது முன்னேறுகிறது.. இல்லையா? வலி நிறைந்த கேள்விக்கு அவ்வளாகம் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: